Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Friday, 16 March 2018

online job websites


ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள் செய்ய சிறந்த தளங்கள்

ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள் என்பது கொடுக்கப்பட்ட தகவல்களை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்வது ஆகும். இந்த தளங்களில் நீங்கள் டைப் செய்வதன் மூலம் சம்பாதிக்க இயலும். இவை பெரும்பாலும் காப்ட்சா என்ட்ரி , இமேஜை பார்த்து டைப் செய்தல், வீடியோ, ஆடியோ கேட்டு டைப் செய்தல் மற்றும் கூகுளில் தேடி என்ட்ரி செய்தல் என பல்வேறு மாறுபட்ட வடிவில் கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே வருகின்றன.

சரி ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள் மூலம் சம்பாதிப்பது?

இங்கு உங்களுடைய டைபிங் திறமையை வைத்து சம்பாதிக்க முடியும். நல்ல ட்ய்பிங் ஸ்பீட் இருந்தால் நீங்கள் நன்கு சம்பாதிக்க இயலும். முன்பு கூறியது போல அனைத்து வேலைகளும் ஆங்கிலத்தில்தான் இருக்கும். பெரும்பலான வேலைகளுக்கு ஆங்கிலம் டைப் செய்ய தெரிந்திருந்தால் போதுமானது. எடுத்துக்காட்டாக காப்ட்சா என்ட்ரி தளங்களை கூறலாம் ஏனென்றால் இங்கு நீங்கள் பார்த்து மட்டும்தான் டைப் செய்வீர்கள். மேலும் சில வீடியோ, ஆடியோ கேட்டு டைப் செய்யும் தளங்களில் உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பது மிக அவசியம்.

அனைத்து சிறந்த தளங்களும் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக மெம்பர்களை சேர்த்து கொள்கின்றன. உங்களிடம் டேட்டா என்ட்ரி வேலைக்கு யாராவது பணம் கேட்டால் கண்டிப்பாக கொடுக்க வேண்டாம்.  ஏனென்றால் இங்கு பணம் வாங்குவதற்கு எந்தவித அவசியமும் இல்லை. பெரும்பாலும் ட்ரைனிங் பாக்கேஜ் என்ற பெயரில்தான் பணம் கேட்பார்கள். பணம் கொடுத்து எமர்ந்த கசப்பான அனுபவம் எனக்கும் உண்டு.
எனவேதான்   இந்த ஆர்டிக்கிளில் இலவசமாக இணைய கூடிய சிறந்த டேட்டா என்ட்ரி வேலைகளை வழங்கக்கூடிய தளங்களை பட்டியலிட்டுள்ளோம். அவற்றை இப்போது காணலாம்.

மெகாடைபர்ஸ்

மெகாடைபர்ஸ் ஒரு காப்ட்சா என்ட்ரி தளம். இங்கு நீங்கள் இலவசமாக இணைத்து வேலை பார்க்க ஆரம்பிக்கலாம். மேலும் காப்ட்சா என்ட்ரி தளங்களில் வேகமாகவும், சரியாகவும் எனத் செய்வது மிக முக்கியம் ஆகும். பெரும்பாலும் கேஸ் சென்சிடிவ் காப்ட்சாக்கள்தான் நிறைய வழங்கப்படுகின்றன. சரியாக டைப் செய்தால் நல்ல வருமானம் ஈட்ட முடியும். நீங்கள் டேட்டா என்ட்ரி வேலைக்கு புதியவராக இருந்தால் இந்த காப்ட்சா என்ட்ரி வெப்சைட்டுகள் தான் சிறந்த இடம்.
இந்த தளங்கள் 1௦௦௦ காப்ட்சா என்ட்ரிக்களுக்கு .4 முதல் 1$ வரை தருகின்றன. மேலும் இந்த தளத்தில் நீங்கள் $3 சேர்த்தவுடன் பேபால் மூலம் உங்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம்.


காப்ட்சா டேட்டா என்ட்ரி இலவச ஆன்லைன் வேலைகள்


ஒவ்வொரு திங்கள் கிழமையும் உங்களுக்கு பணம் வழங்கப்படும் இதற்கு உங்கள் அக்கவுண்டில் குறைந்தது $3 இருக்க வேண்டும்.
ஸ்மார்ட் காப்ட்சாவை அக்டிவேட் செய்வதன் மூலம் உங்கள் வருமானத்தை 25% வரை அதிகரிக்க இயலும் எனவே அதை அக்டிவேட் செய்ய மறந்து விடாதீர்கள் இதற்கு உங்களுக்கு சில ஆங்கில வார்த்தைகள் தெரிந்து இருந்தால் போதுமானது. இங்கு இணைய உங்களுக்கு இன்விடேஷன் கோட் தேவைப்படும் நீங்கள் ” C0DO ” அல்லது ” B63H ” என்ற கோடுகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
பேமன்ட் பேபால் மூலம் வழங்கப்படும்.



பைவர்


இது ஒரு ப்ரீலேன்சிங் வெப்சைட் ஆகும். இங்கு நீங்கள் இலவசமாக இணைந்து உங்கள் ப்ரோபைலை உருவாக்கி உங்களுக்கு வாய்ப்பு வரும் போது சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். இந்த தளத்தில் நீங்கள் முடித்து கொடுக்கும் வேலைக்கும் குறைந்தது ரூபாய் 250 சம்பாதிக்கலாம்.
இங்கு உங்களுக்கான ஒரு ப்ரோபைலை உருவாக்கி அங்கு நீங்கள் என்ன வேலை செய்வீர்கள் என்ன திறமைகள் இருக்கின்றன என்பதை பில் செய்தால் உங்களுக்கு டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்பு தேடி வரும். எனவே சரியான முறையில் ஒரு ப்ரோபைலை உருவாக்கி கொள்ளுங்கள்.
பெரும்பாலும் இந்த வேலைகளுக்கு எச்செல் சாப்ட்வேர் தெரிந்திருந்தால் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.



க்ரவுட்பிலோவேர்

இது ஒரு மைக்ரோடாஸ்கிங் தளம் அதனால் இங்கு பல விதமான டாஸ்குகள் வழங்கப்படுகின்றன. அதில் நீங்கள் டேட்டா என்ட்ரி வேலைகளை வேலைகளை தேர்ந்தெடுத்து வொர்க் செய்யலாம்.
நான் இந்த தளத்தில் நிறைய டாஸ்குகளில் வொர்க் செய்துள்ளேன். இங்கு நிறைய டேட்டா என்ட்ரி டாஸ்குகள் வழங்கப்படுகின்றன மற்ற டாஸ்குகளை விட டேட்டா என்ட்ரி டாஸ்குகள் எளிமையாகவே இருக்கும். பெரும்பாலும் கொடுக்கப்படும் என்ட்ரி வேலைகள் இமேஜை பார்த்து டைப் செய்பவை அல்லது இன்டர்நெட்டில் தேடுபவையாக இருக்கும்.
க்ரவுட்பிலோவேர் நேரடியாக மெம்பெர்களை சேர்த்து கொள்வதில்லை ஆனால் நீங்கள் கிளிச்சென்ஸ் அல்லது நியோபக்ஸ் மூலம் சேர்த்து கொள்ளலாம். இங்கு சேர உங்களுக்கு ஒரு பேஸ்புக் அக்கௌன்ட் தேவைப்படும்.

எம்டர்க்

டேட்டா என்ட்ரிக்கு அதிக வாய்ப்பு உள்ள தளம் கண்டிப்பாக எம்டர்க்தான். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான டேட்டா என்ட்ரி வேலைகள் போஸ்ட் செய்ய படுகின்றன. இமேஜிலிருந்து பார்த்து டைப் செய்தல், வீடியோ, ஆடியோவை கேட்டு டைப் செய்தல் போன்ற அனைத்து விதமான வேலைகளும் இங்கு உள்ளன. உதரணத்திற்கு கிழே உள்ள இமேஜை பாருங்கள்.
அமேசான் ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள்
இது அமேசான் நிறுவனத்தால் இயக்கப்படும் வெப்சைட் இங்கு  உடனடியாக சேர்த்து கொள்வதில்லை. ஆனால் ஒரு தடவை நீங்கள் ரெஜிஸ்டர் செய்து விட்டால் உங்களுக்கு வாய்ப்பு வரும் போது உங்களுக்கு மெயில் மூலமாக தெரிவிக்கப்படும். இதற்கு உங்களுக்கு ஒரு அமேசான் அக்கௌன்ட் தேவை படும். உங்களிடம் அக்கவுண்ட் இல்லையெனில்   இப்பொழுதே அமேசானில் ஒரு  அக்கவுண்ட் ஓபன் செய்து  ஒரு அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்வது நல்லது. செய்த பின்பு www.mturk.com என்ற தளத்திற்கு சென்று வொர்கர் ஆக பதிவு செய்து கொள்ளுங்கள்.


அப்வொர்க்


அப்வொர்க் ஒரு மிகசிறந்த ப்ரலான்சிங் வெப்சைட் இங்கு அனைத்து விதமான டேட்டா என்ட்ரி வேலைகளும் போஸ்ட் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் டேட்டா என்ட்ரி வேலைகள்தான் வழங்கப்படுகின்றன. இங்கு கொடுக்கப்படும் ப்ரோஜெக்ட்களில் நீங்கள் அப்ளை செய்வதன் மூலன் நீங்கள் இங்கு வேலை பெற முடியும்.
உங்களுடைய வருமானம் ப்ரொஜெக்டின் அளவை பொருத்தது. இங்கு பெரும்பாலும் ஆடியோ, வீடியோ போன்றவற்றிலிருந்து கேட்டுத்தான் டைப் செய்ய வேண்டி இருக்கும்.
அப்வொர்க் ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள்
இங்கு நீங்கள் உங்களுடைய மணி நேர உதியத்தை தேர்வு செய்து ப்ராஜெக்ட் போஸ்ட் செய்பவர்களை தொடர்பு கொள்ளலாம். இங்கு நல்ல வருமானம் ஈட்ட முடியும்.



இந்த மாதிரியான டேட்டா என்ட்ரி  தளங்களில் இணைவதற்கு முன்பு உங்களுடைய டைபிங் ஸ்பீட் மற்றும் ஸ்கில் போன்றவற்றை நன்கு தயார்படுத்தி கொள்வது நல்லது. ஏனென்றால் அதை பொறுத்துத்தான் உங்களுடைய வருமானம் இருக்கும்.
பெரும்பாலும் எச்செல் சம்பந்தமான ஸ்கில் தான் தேவை படும். நிறைய தளங்கள் எச்செல் டுடோரியல்களை இலவசமாக வழங்குகின்றன  எனவே எச்செல்  கற்று கொள்ள நீங்கள்  ஆன்லைனை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் இது பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் கமென்ட் செய்யுங்கள்.


2 comments:

  1. What is istill and how to do it

    ReplyDelete
  2. I’m excited to uncover this page. I need to to thank you for ones time for this particularly fantastic read!! I definitely really liked every part of it and i also have you saved to fav to look at new information in your site. data entry rates per hour

    ReplyDelete