Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Tuesday, 22 October 2019

ஆரோக்கியமான... நீளமான... கூந்தல் வளர வேண்டுமா...?

            ஆரோக்கியமான... நீளமான... கூந்தல் வளருவது எப்படி....??

கூந்தல் நீளமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவாக இருக்க வேண்டும். .இதை நினைவில் கொண்டு பலர் செயற்கையான கெமிக்கல் கலந்த பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். பிறகு  அழகு நிலையத்திற்கு  சென்று அழகு செய்கின்றன. ஆனால் அதற்கு நிறைய செலவாகும். கூந்தலை பராமரித்து அழகு செய்வதற்கு நிறையவே செலவாகும். கூந்தலை பராமரிப்பதற்கும்,ஆரோக்கியமாக நீளமாக வளர்வதற்கும் இயற்க்கையான 4 சிறந்த வழிகள் உள்ளன . 


கூந்தல் ஆரோக்கியமாக  வளருவதற்கு......
1.தலை மசாஜ்:
       டென்சன் அடைவதே முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது .தலைக்கு மசாஜ் செய்வதே டென்சனை குறைக்க சிறந்த வழி. எண்ணையை கையில் ஊற்றி கொண்டு தலையில் நன்கு தேய்த்து பிறகு கையில் இருக்கும் எண்ணையை கூந்தலுக்கிடையில் விட்டு, விரல்களால் மசாஜ் செய்யவும். இவ்வாறு தினமும் 15 நிமிடம் செய்து வந்தால், டென்சன் குறைவதோடு கூந்தலும் நன்கு வளரும். 


                   
2. காய்கறிகள் : 
      காய்கறிகளை பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் நன்கு வளரும். இது  நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். குடைமிளகாயை தண்ணிரில் கொதிக்க வைத்து பின்பு குளிர்ந்த பின் தலைக்கு விட்டு மஜாஜ் செய்தால் பொடுகு போய் கூந்தல் உதிராமல் ஆரோக்கியகமாக நன்கு வளரும் .கூந்தல் நீளமாக வளர வெங்காயத்தை ஷாம்புவுடன்தேய்த்து குளிக்கலாம் .20 நாட்கள் தொடர்ந்து செய்து பின் சாதாரண ஷாம்புவால் அலசினால் பொடுகு இல்லாமல் நீளமாக கூந்தல் வளரும் .

3. உணவு :
     பொட்டாசியம் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்த உணவை அதிகமாக உண்பதால் முடி நன்கு வளரும் .சிக்கன் ,மீன் போன்றவை சாப்பிட்டு வந்தால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும் .கூந்தலுக்கு ஆரோக்கியத்தையும் வலுவையும் தருவது தாதுப்பொருட்கள் ஆகும் .


4. தண்ணீர் :
           உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது தண்ணீர் மட்டுமே ஆகும் .ஒவ்வொரு உயிருக்கும் மிகவும் அவசியமான ஒன்று.சாதாரணமாக ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் .உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்குகிறது .கூந்தல் நன்கு வேகமாக வளர உருளைக்கிழங்கு தண்ணிரில் வேக வைத்து அந்த நீரில் கூந்தலை அலசினால் கூந்தல் நன்குவேகமாக வளரும் .
      கூந்தல் ஆரோக்யமாகவும், நீளமாகவும் வளர மேற்கூறிய செயல்களை செய்யலாம் .




No comments:

Post a Comment