நேரடித் தொழிலில் நிறையவே சம்பாதிப்பது எப்படி ??
நிறைய சம்பாதிப்பதற்குத் தொழில் செய்வதினால் மட்டுமே முடியும். வேலை செய்வதால் காலத்தை ஓட்டலாம். தொழில் செய்தும் காலத்தை ஓட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் அரை வேக்காடுகளை நாம் ஓன்றும் செய்யமுடியாது.பணம் சம்பாதிக்க வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும் இன்று பல பேருடைய பிரச்சனை பணம் தான். கையில் பணம் இல்லை. யாரும் கடன் கொடுக்க மாட்டர்கள். அரசாங்கம் கொடுக்கும் பணம் நமது இனத்தினருக்கு வந்து சேருவதில்லை.ஆனால் அனைத்துயும் விட மிக மிகத் தலையாயது ஒன்று உண்டு. நம்மை மற்றவர்கள் நம்ப வேண்டுமானால் நம்மிடமும் கொஞ்சமாவது பணம் இருக்க வேண்டும். மகாத்மா காந்தியையே நம்பாத உலகம் இது. நம்மை நம்ப வேண்டும் என்னும் அவசியம் யாருக்கும் இல்லை.மூதலீடு இல்லாத தொழில் ஒன்று உண்டு என்றால் அது நேரடித் தொழில் மட்டும் தான்.
No comments:
Post a Comment