மசாலா பொடி
➽மசாலா பொருட்களின் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாக இந்தியா விளங்குகிறது .இந்தியாவில் இருந்துதான் மிளகாயின் உற்பத்தி பெருமளவில் பெறப்படுகிறது . மற்றைய மசாலாப் பொருட்களை தனியா, வெந்தயம், மிளகு, சீரகம், சோம்பு,கடுகு , என பலவகையான மசாலாப் பொருட்கள் உள்ளன. இந்திய உணவில் குறிப்பாக சாம்பார், குழம்பு, மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, மீன் மசாலா என பலவகை மசாலாக்களை வீட்டில் முன்பு பெண்களே வறுத்து அம்மியில் அரைத்து உபயோகித்தனர்.இன்றைய காலகட்டத்தில் யாரும் வீட்டில் தயாரிப்பதில்லை .
➽இப்போது இதனை ஒரு மசாலா பவுடராக
தயாரிக்கப்பட்டு கடைகளில் 25கிராம் முதல் 100 கிராம்
வரை பாக்கெட்டுகளாக விற்பனை செய்யபடுகிறது. பல
நிறுவனங்கள் இதனை தயாரித்தாலும் மக்களின்
அன்றாடவாழ்க்கைக்கு தேவை அதிகம். மசாலா அறைக்கப்படும் அம்மி என்பது இப்போது ஒரு சிலவீடுகளில் தான் உள்ளது .இதற்கு காரணம் அனைவரும் இந்த
மசாலாப் பொடிக்கு மாறி விட்டதால் யாரும் அம்மியை பயன்படுத்துவதில்லை .
சிறப்பம்சங்கள்
:-
Ø மக்களுக்கு சுவையான மசாலா பொருட்கள் கிடைத்து விட்டால் அதனையே பயன்படுத்துவார்கள் .அனைவரும் பயன்படுத்துவார்கள் .
Ø இந்த மசாலா பொருட்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் .
Ø இது மிகவும்
நல்ல லாபகரமான தொழில்.

No comments:
Post a Comment