Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Wednesday, 23 October 2019

முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்!

முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்

 நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி ஆரோக்கியமற்ற தலைமுடியாகும் . பெரியவர்கள் முதல் குழந்தைகள்  வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னை ஆகும் . தலை முடி பராமரிக்க பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் ரசாயனம் கலந்தவை ஆகும் .இதனை பயன்படுத்தும்போது ஆரம்பத்தில் முடி அழகா இருக்கும் .ஆனால் தொடர்ந்து இதனை பயன்படுத்தினால் நமக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் .தலையில் எண்ணையே தடவாமல் உங்கள் மூடியை பளப்பாகவும் மென்மையாகவும் ,கருமையாகவும் இருக்க நான்ஸ்டிக் ஸ்பிரே போதும் ...என்று சொல்லி பல விளம்பரங்களை காட்டி மக்களை ஈர்க்கின்றன .
சுருள் முடியாக இருப்பவர்கள் நேரான முடியையும் ,நேரான முடி இருப்பவர்கள் சுருள் முடியையும் ,குறைந்த முடி இருப்பவர்கள் அதிக முடியையும் இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றன .இந்த ஏக்கத்தை சுலபமாக போக்கலாம் .அலகு நிலையங்களில் இதற்கான சிகிக்சை பெறலாம் .அழகு நிலையத்திற்கு செல்வதற்கு முன்பு தோல் சிகிக்சை நிபுணரை சந்திப்பது நல்லது    .செலவு இல்லாமல் பக்க விளைவுகள் வராமல் பாரம்பரிய முறைகளை பயன்படுத்துவது நல்லது .


நமக்கு இருக்கும் மிகவும் முக்கியமான பிரச்சனை முடி பிரச்சனை ?இந்த முடிவு இல்லாத நீடிக்கும் முடி பிரச்சனைக்கு நிச்சயமாக தீர்வு கிடைக்கும் .முடி வளர்ச்சிக்கான 
ஊட்டத்தை தருவதற்கும் முடியை பராமரித்து பாதுகாக்கவும் ஆர் .எம் ஹெர்பல்ஸ் உரியமையாளரும் இயற்கை அழகுக்கலை நிபுணருமான ராஜம் முரளி, பேஜ்-3 அழகு நிலையத்தின் முடி பராமரிப்பு நிபுணர்கள், மதன், அரவிந்த், கெவின் கேர் நிறுவனத்தின் தலை முடி மற்றும் சரும முதன்மை ஆராய்ச்சியாளர் லட்சுமி தியாகராஜன் மற்றும் உணவியல் நிபுணர் சோஃபியா போன்ற வல்லுநர்கள் இங்கே வழிகாட்டுகிறார்கள்.








     நமது  தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும்.  நாம் குளிக்கும்போது  சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும். நம் உடலின்  ஆரோக்கியம், மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு முடி 25 தடவை உதிர்ந்து, பிறகு அதே இடத்தில் வளர்ந்தும்விடும். ஆனால், அதற்கு  மேல் விழுந்தால் வளராது
.      

                  


அந்த காலத்தில் முடி ஆரோக்கியமாக வளர குழந்தைகளுக்கு எண்ணெய் குளியல்களில் குளிப்படுவார்கள் .குழந்தை பிறக்கும் போதே முடியை ஆரோக்கியமாக பராமரித்துவிட்டால் வயதானாலும் அடர்த்தியாகவும் ,ஸ்ட்ராங்காவும் இருக்கும் .இக்காலகட்டத்தில் முடியில் எண்ணையே படக்கூடாது என்று டாக்டர்களே அட்வெய்ஸ் பண்ணும் அளவிற்கு இருக்கிறது .எண்ணெய் தேய்ப்பதால் நமது சருமத்திற்கு மென்மையாகவும் ,பளபளப்பையும் கூட்டி உடலை புத்துணர்ச்சியாக்குவது எண்ணெய் ஆகும் .சருமத்தையும் எண்ணையும் வறண்டு போகாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்த வேண்டும் .

  ⇛ குழந்தை பிறந்தவுடன் முதல்  45 நாட்கலானா  குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.  இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும்.



       ⇛குழந்தைக்களுக்கென  விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி, வாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.  
⇛குழந்தை பிறந்து  ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு எடுத்து வார ஆரம்பிக்கலாம்.  வாரும்போது மேலிருந்து கீழாக வார வேண்டும்.  இதனால் முடி அடர்த்தியாக வளரும்.   

⇛ பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டை பின்னல் போடுவதால் முடி  நீளமும், அடர்த்தியும் வளரும் .
  



தலைமுடி உதிர்வதைத் தடுக்க...

⇴நமது முடி உதிர்வதற்கு காரணம் மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாக்கு , ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். முடி சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு அதிகமாக உதிரும்.   

⇴ நம்  தலைமுடிக்கு  ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால்   முடி உதிர்வதைத் தடுக்கலாம்.  


















தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கி,  தலையில் வேர்களில்  தடவி விரல்களால் மசாஜ் செய்யவேண்டும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து அதனை தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும்.  தொடர்ந்து தினமும் இதனை  ஒரு வாரம் செய்து,வந்தால்  முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பது மட்டுமல்லாமல்  முடி வளர்ச்சியையும் தூண்டும்.

பேன் / பொடுகைப் போக்க...
தலைக்கு  குளித்துவிட்டு துவட்டாமல்போவது, தலையில் சோப்பு தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவது, அழுக்குத் தலை, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள், தோல் நோய்கள் போன்ற பல காரணங்களால் பொடுகு வருகிறது. மேலும், மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம்.

இதுதான் வழுக்கை வருவதற்கு  முந்தைய நிலை. இதனை  ஆரம்பத்திலயே கண்டுபிடித்துவிட்டால், பொடுகுக்கான சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

 அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து அதனுடன் ஒரு கப் மரிக்கொழுந்தையும் அரைத்து  தலைக்கு பேக்கில் தேய்த்து   10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். சொறி, சிரங்கு, கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.

நரையைப் போக்க...

⇎நெல்லிக்காய் 5, மருதாணி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, 2 லவங்கம் இவற்றைத் தனித்தனியே அரைத்துச் சாறெடுத்து ஒன்றாகக் கலக்குங்கள்.  இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவந்தால், இளநரை நெருங்காது.  

⇎நெல்லி முள்ளி, கறிவேப்பிலை, வேப்பங்கொட்டை, பிஞ்சு கடுக்காய், அவுரி விதை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து நைஸாகப் பொடிக்கவும்.  இதில் ஆலிவ் ஆயிலை விட்டு வெயிலில் காயாவைத்து எடுக்கவும்.  இந்த எண்ணெயைத் தினமும் தடவிவந்தால், நரை முடி சீக்கிரத்திலேயே மாறிவிடும்.   

 கருமையான கூந்தலுக்கு...

⇛ பலா இலை, செம்பருத்தி, நெல்லி முள்ளி, கறிவேப்பிலை இந்த நான்கையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு, தினமும் தேய்உங்கள் , செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.  

⇛100 கிராம் ஆவாரம் பூ, வெந்தயம் - 100 கிராம், பயத்தம் பருப்பு - அரைக் கிலோ மூன்றையும் மெஷினில் அரைத்துக்கொள்ளுங்கள்.  இந்த பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு குளித்தால் , கருகருவெனக் கூந்தல் வளரும் .

⇛ சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து இந்த விழுதை பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இதுபோல செய்தால், வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக முடி வளரும்.  இதனை பயன்படுத்துங்கள் .


வழுக்கை விழுவதைத் தடுக்க...

⏩எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி சின்ன வெங்காயம் மூன்றையும் கரகரப்பாக அரைத்து, வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அலசினால், உயிர்ப்புள்ள வேர்க்கால்கள் திறந்து, மறுபடி முடி வளரத் தொடங்கும்.
⏩நமது கிராமங்களில் கிடைக்கும் குமுட்டிக்காயை வாங்கி, அதை வெட்டினால் உள்ளுக்குள் ஈரப்பதம் இருக்கும்.அதனை  வழுக்கை விழும் பகுதியின் மேல் அதைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து ஊறியதும் கழுவினால், உதிர்ந்த இடத்தில் முடி வளரும்..

⏩ மருதாணி பவுடர் - ஒரு கப், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, டீ டிகாக்ஷன் - ஒரு கப், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு இவற்றுடன் மொட்டான முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.  ஹென்னாவைத் தலைக்குப் போடுவதால் முட்டை வாசனை மறைந்து பூக்களால் தலை வாசம் வீசும்.




No comments:

Post a Comment