இந்த எண்ணையை பயன்படுத்தினால் தலைமுடி
அடர்த்தியாகவும் வேகமாகவும் வளரும்
தலைமுடி உதிர்தல் என்பது நம்முடைய அன்றாட வாழ்வில் அனுபவித்து வரும் பிரச்சனையில் ஒன்றாகும் .தலையில் உண்டாகும் சில பிரச்சனைகள் இந்த முடி உதிர்வதற்கு காரணம் ஆகிறது .இந்த முடி உதிரும் பிரச்சனையானது தலையில் உள்ள பொடுகினாலும் வரலாம் .
இந்த பொடுகானது வெயிலில் உள்ள தூசி ,புகை ஆகிய அழுகினால் வரலாம் .
இந்த பொடுகுகள் முடி உதிர செய்வது மட்டும் அல்லாது ,முகத்தில் பருக்களையும் ஏற்படுத்தும் .
தலையில் உள்ள பிரச்சனைகளுக்கு தனித்தனியாக மருந்து வாங்கி பயன்படுவது மிகவும் கஷ்டமான ஒன்றாகும் .நாம் கடைகளில் விற்கும் எண்ணெய்களில் என்னென்ன பொருள்கள் கலந்து இருப்பார்கள் என்று நமக்கு முழுவதும் தெரியாது .சிலருக்கு கண்ட எண்ணையை பயன்படுத்துவது பிடிக்காமல் இருக்கும் .எனவே நீங்கள் உங்கள் நேரத்தின் சிறிய பகுதியை ஒதுக்கி இந்த இயற்கை கூந்தல் தைலத்தை தயாரிக்கலாம்.பிறகு தினசரி இந்த இயற்கை தைலத்தை உபயோகிக்கலாம் .
கூந்தல் தைலம் 1:
➤தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டுவதற்காக பயன்படுத்த படுகிறது .அவற்றோடு கரிசலாங்கண்ணி ,மருதாணி ,பொன்னாங்கன்னி ஆகியவை முடி வளர்ச்சியை தூண்டும் .மற்றும் தலையை சுத்தமாக வைத்து
கொள்ள உதவும் .
தேவையான
பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் - 50 கிராம்
ஆலிவ் எண்ணெய்
- 50 கிராம்
பாதாம் எண்ணெய் - 50 கிராம்
வைட்டமின் எண்ணெய் - 50 கிராம்
கடுகு எண்ணெய்
- 50 கிராம்
நல்லெண்ணெய் - 50 கிராம்
கரிசலாங்கண்ணித் தைலம்
- 50 கிராம்
பொன்னாங்கன்னித் தைலம் - 50 கிராம்
மருதாணித் தைலம்
- 50 கிராம்
வேம்பாலம் பட்டை - 50 கிராம்
சூரியகாந்தி எண்ணெய்
- 50 கிராம்
பயன்படுத்தும்
முறை :
இந்த கலவைகளை நன்றாக கலந்து, மிதமாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் அவ்வப்போது
தேய்த்து வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக
வளர உதவும். இதில் சில
குறிப்பிட்ட பொருட்கள் நாட்டு மருந்துக் கடைகளில்
எளிதாக கிடைக்கும். வாரம் இரண்டு முறை மருதாணி
இலையை தலையில்தேய்த்து குளித்தால் , கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்
இருக்கும்.
கூந்தல் தைலம் 2:
நெல்லிக்காயை
பாலில்வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு தலையில்தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல்
மிருதுவாகும்.
டீ டிகாஷன்
டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சபழச்சாறு கலந்து தலையில்தேய்த்து குளித்தால்,
கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்
கூந்தல்
தைலம் 3:
கறிவேப்பில்லையை உணவில் சேர்த்துக் கொண்டாலும்
முடி கருமையாக வளரும், செம்பருத்தி முடியை
மிருதுவாக்க உதவுகிறது. வெந்தயம் இயற்கையாக முடியை சுத்தம் செய்ய
உதவுகிறது.
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை
- 2 கை அளவு, செம்பருத்தி இலை
- 1 கை அளவு, மருதாணி இலை
- 1 கை அளவு, செம்பருத்தி பூ
- 5, நெல்லிக்காய் - 2, வெந்தயம் - 1 தேக்கரண்டி., தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்.
கூந்தல் தைலம் 4:
கற்றாழை தழைக்கும் உடலுக்கு குளிர்ச்சிதரும் ஒன்று. தலையில்
உள்பொடுகு பிரச்சனைகளை போக்க கற்றாழை பயன்படுகிறது. கற்றாழையில் அதிகப்படியான மருத்துவ குணங்கள்
உள்ளன. இது முடி வளர்ச்சிக்கு
மிகவும் உதவுகின்றன.
தேவையான பொருட்கள்:
➤கற்றாழை.
➤படிகாரம்
➤நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய்
செய்முறை:
நன்கு சதையுள்ள மூன்று கற்றாழை எடுத்து அதில் உள்ள சதை பகுதியை ஒரு
பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள் .அவற்றின் மீது படிகார பொடியை தூவவேண்டும் .இப்போது சதையில் உள்ள நீர் பிரித்து விடும் .தற்போது பிரிந்த நீருக்கு சமமாக தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக சுண்டும் வரை அவற்றை
காய்ச்ச வேண்டும் .
புன்பு காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும் .
சாப்பிட வேண்டியவை :
➯முடி வளர்ச்சிக்கு தைலங்களை மட்டும் பயன்படுத்தினால் போதாது
➯நம்முடைய அன்றாட வாழ்வில் உண்ணும்
உணவில் ஊட்டச்சத்து இருக்க வேண்டும் .ஆகையால்
உணவில் கீரை ,பேரிச்சம்பழம் ,திராட்சை
ஆகிய சத்தான பொருள்களை சேர்த்து
கொள்ள வேண்டும் .




No comments:
Post a Comment