Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Tuesday, 3 December 2019

கிணறு அமையும் திசைகளும் பலன்களும்

கிணறு 
தற்போது இல்லங்களில் கிணறு அமைப்பது அரிதாக உள்ளது .வடகிழக்கு ஈசான்யத்தில் கிணறு அமைவது விசேஷமானது .இவ்வாறு அமைந்த திருக்குளங்கள் புகழ் பெற்று இருப்பதை காண முடியும் .
பெரிய பங்களா போன்ற இடங்களில் நீச்சல் குளங்கள் வடகிழக்கில் அமைவது நன்மை தரும் .
கிணறு சரியாக இல்லை என்று ஜலம் உள்ள கிணற்றை மூடுவது தர்மசாஸ்திரத்திற்கு விரோதம் ஆகும் .இதை முடாமலே சரி செய்ய பல வழிமுறைகள் உள்ளது .
வடக்கு  மிகுந்த லாபம்
வடகிழக்கு தான லாபம்
கிழக்கு எதிர்பாராத பண வரவு
தென்கிழக்கு அவமானம்
தெற்கு தேவையற்ற விரோதங்கள்
தென்மேற்கு எதிர்பாராத தன நஷ்டம்
மேற்கு குழந்தைகளுக்கு கெடுதல்
வடக்கு மேற்கு எதிர்பாராத விரோதங்கள்
கிணறு அமையும் திசைகளும் பலன்களும் 
கிணறை இருந்தாலும் ஆழ்துளை குழாயயை இருந்தாலும் வாஸ்துப்படி அமைய வேண்டும் என்பது விதி ஒன்றுதான் .என்றாலும் சிறு வேறுபாடுகள் உண்டு .
வீட்டின் வடகிழக்கு பகுதியிலோ ,வடக்கு சார்ந்த கிழக்கு பகுதியையோ கிழக்கு சார்ந்த வடக்கிலோ அமைவது நன்மை தரும் .
ஆனால் அப்படி அமையும் போது கூட வீட்டிற்கும் கம்பவுண்டு கேட்டின் வடகிழக்கு மூலையும் ,கட்டிடத்தின் வடகிழக்கு முலையும் சந்திக்கும் நேர்கோட்டில் கிணறு அல்லது குழாய் அமைவது நல்லது .
சிலர் கிணற்றை சுற்றி கட்டும் உயரமான தரைப் பகுதி சதுரமாக அமைவது நல்லது என்பார்கள் .
கிணற்றின் உட்புறம் கூட சதுரமாக அமைவது நம்மை என்பார்கள் .வீட்டின் பிரதான வாசலுக்கு எதிரிலும் வீட்டின் பின்புற வாசலுக்கு எதிரும் கிணறு அமையாமல் இருப்பது நல்லது .சில இடங்களில் இவ்வாறு அமைந்தால் கிணற்றுக்கு வாசலுக்கும் இடையே துளசி செடி வைப்பது நன்மை தரும் .
வடகிழக்கில் உள்ள கிணறு நீர் இல்லாமல் போனாலோ குழாயின் தண்ணீர் உபயோகிக்க முடியாத சுவையாக மாறினாலோ தெற்கு பக்கமோ கிணறு அல்லது குழாய் அமைத்து கொள்ளலாம் .
ஆனால் தெற்கு சார்ந்த தென்கிழக்கு மேற்கு சார்ந்த வட மேற்கில் கிணறு குழாய் அமைப்பதை தவிர்க்கலாம் .போதிய இடம் உள்ள வீடாக இருந்தால் வேறு திசையில் அமைந்த குழாயில் இருந்து நீரை வடகிழக்கு தொட்டி அமைத்து அதில் நீர் வந்து சேரும்படி அமைந்து அதன் பின் உபயோகப்படுத்தி கொள்ளலாம் .அரசாங்கம் வழங்கும் குடிநீர் குழாய் கூட வடகிழக்கில் அமைவது நல்லது .

நீர்நிலை தொட்டி கிணறு அல்லது குழாய் கீழ்க்கண்ட இடங்களில் அமைவது நன்மை தராது

















No comments:

Post a Comment