Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Friday, 6 December 2019

கெலுத்தி மற்றும் இறால் மீன்

கெலுத்தி மீன் 
கெலுத்தி மீன் பரவலாக வளர்க்கப்படுவதில்லை ஆனால் அதில் நாம் நல்ல லாபம் அடைய முடியும் என்பதை இன்று மீன்வளர்ப்பவர்கள் உணர்ந்து வருகின்றனர். இவற்றில் பல்வேறு வகைகள் உள்ளன அவற்றின் பண்புகளை அறிந்து கொள்வது மிகவும் பயனுடையதாக இருக்கும் என்பதால் தனி தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கெழுத்தி மீன்கள் பற்றிய பண்புகள் 
இவை உயிர் வளி குறைந்து இருக்கும் நீரில் வாழும் தன்மை உடையவை இவற்றின் முட்கள் குறைவாகவே இருக்கும் அதனால் மக்கள் விரும்பி வாங்கும் நிலை உள்ளது.
 இந்த மீன்கள் மருத்துவ பண்பு உள்ளவை.
 இது நீருக்கு வெளியிலும் எளிதில் சாவது இல்லை அதனால் நுகர்வோர்கள் இவற்றை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
நீருக்கு வெளியில் மட்டுமின்றி சேற்றிலும் வாழும் தன்மை உடையது இதனுடைய வளர்ச்சி வேகமானது அதனால் மீன் பண்ணையாளர்கள் நல்ல லாபத்தை குறுகிய காலத்தில் அடைய முடியும்.
இந்த வகை மீன்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இவை மாமிசக் கழிவுகளையும் காய்கறிக் கழிவுகளையும் விரும்பி சாப்பிடும் இயல்புடையவை. மீன் வளர்ப்பதற்கு இடைஞ்சல் தரும் களை  மீன்களை விரும்பி உண்பவை பல்வேறு கெண்டை மீன்களின் வளர்ப்பில் அடையும் லாபத்தை விட அதிக அளவில் லாபம் அடைய முடியும்.
கெழுத்தி மீன்கள் மிகவும் சுவையானவை.
 தரமற்ற நீரிலும் கூட இவை நன்றாக வளரும் திறன் உடையவை.
 நீருக்கு வெளியில் இருக்கும் காற்றை சுவாசிக்கும் திறன் இந்த வகை மீன்களுக்கு உண்டு.
இத்தனை சிறப்புகள் இருந்தும் இவை பலவாறாக வளர்கப் பெறுவதில்லை அதற்கு காரணம் கெண்டை ரோகு போன்ற மீன் இனங்களுக்கு குஞ்சு பொரிப்பகங்கல் நிறைய உள்ளன ஆனால் கெழுத்தி மீன் இனங்களுக்கு குஞ்சு பொரிப்பகம் அதிகமில்லை மீன்வளத்துறை இதில் கவனம் செலுத்தி மீன் வளர்ப்பவர்களை ஊக்க படுத்த வேண்டும் .
கெளுத்தி மீன்கள் வளர்ப்பதற்கு எளிமையானவை நல்ல பராமரிப்பில் ஏக்கருக்கு 100 டன் வரை மீன் உற்பத்தி செய்ய முடியும்.கெளுத்தி மீன் மாமிசம் சுவையாக இருப்பதால் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள் .இவ்வகை மீன்கள் செதில்கள்  இல்லை அதனால் சுத்தம் செய்வது எளிது.
கெழுத்தி  புரதச்சத்து நிறைந்தது இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகள் கெழுத்தி   வகைகளுக்கு உண்டு இவற்றுள் ஏராளமான வகைகள் உண்டு. அவற்றை முழுவதுமாக தெரிந்து கொள்ளாவிட்டாலும்  பயனுள்ளவைகளையும் வளர்ப்பதற்கு ஏற்ற ரகங்களை மீன் பண்ணை அமைப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் .இனி அவற்றை பற்றி பார்ப்போம் .
கிளேரியஸ் பாட்ராக்கஸ் 
இதனை மாக்கூர் என்றும் கூறுவார்கள் இது நன்னீரில் பரவலாக காணப்படுகிறது தமிழ்நாட்டு மக்கள் இதனை கெலிறு  என்பார்கள் நீரில் மட்டுமின்றி வெளி காற்றையும் சுவாசிக்கும் தன்மை கொண்டது இவற்றின் குஞ்சுகளை நீர்நிலைகளில் இருந்து எளிமையாக சேகரித்துப் பயன்படுத்த முடியும் இவற்றை தூண்டு முறையில் இனப்பெருக்கம் செய்ய முடியும்.

கிளேரியஸ் கேரிபினஸ்  
இதனை ஆப்பிரிக்கா கெலுத்தி என்பார்கள். இது ஆரம்ப காலத்தில் வங்காளதேசத்தில் வளர்க்கப்பட்டன. இவை வேகமாக வளரும் தன்மை உடையவை .
இவை தவளை பாம்பு எல்லாவற்றையும் உணவாக உட்கொள்ளும் தன்மை உடையவை. அவற்றின் குஞ்சுகளின் விலை ஆரம்ப கட்டத்தில் அதிகமாக இருந்தது அதிகமாக குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டதால் விலை குறைந்தது ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை வளர்க்கலாம் இது மாமிசஉண்ணி வகையைச் சார்ந்தது ஆகவே மீன்கழிவு  கோழிக்கழிவு  ஆட்டுக்கழிவு  ஆகிய எல்லாவற்றையும் இவற்றிற்கு உணவாக இடலாம் .இது வளர்ச்சியின் உற்பத்தியில் சிறந்ததொரு இடத்தை பெற்றுள்ளது.
சிவப்பு வால் கெலுத்தி 
இது நல்ல வருமானம் தரக்கூடியது இதற்கு நல்ல விலையும் உண்டு.இதன் கறி மிருதுவாக இருக்கும் நல்ல சுவையுடன் இருப்பதால் நுகர்வோர் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உண்டு .கெலுத்தி மீன்கள் சிலரகம் நீரின் மேல் மட்டத்திற்கு வந்து இறை எடுக்கும். இந்த மீன் நீரின் அடிமட்டத்தில் இருக்கும் தன்மை உடையது .நல்ல முறையில் கவனம் செலுத்தி வளர்த்தால் ஒரு ஆண்டில் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வரை எடை வரும் தன்மை உடையது .விரால் மீனை விட இதற்கு அதிக விலை கிடைக்கிறது அதனால் மீன் வளர்ப்பவர்கள் மத்தியில் இதற்கு சிறப்பான இடம் உண்டு.
தேழிமீன்
கெலுத்தி மீன்களில்  தேழிமீன் ஒரு வகையாகும். இது நன்னீரில் வாழ்வதை அறியமுடிகிறது . இதுவு ம்வெளி காற்றை சுவாசிக்கும் தன்மை உடையது இது பாசிகளை உண்ணும்  புழு பூச்சிகளையும் தின்னும், ஏப்ரல் ஜூன் மாதங்களில் இதன் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. குளங்களில் வளர்ப்பதற்கு ஏற்ற வகையாகும் நல்ல பராமரிப்பில் நல்ல லாபம் அடைய முடியும்.
இறால் மீன்
மீன் வளர்ப்பில் விரால் மீன்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதனால் நமக்கு நிறைய அன்னியச் செலாவணி கிடைக்கிறது. நமதுஉடல்  வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் தேவை. இறால் மீன் புரதசத்து 22 விழுக்காடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.உடல் வளர்ச்சிக்குத் தேவையான தாதுப்பொருட்கள் அமினோ அமிலங்களும் இறால் மீன்கள் உள்ளன .
இந்தியாவில் கணுக்கால்கள் வகை இறால் மீன்களை அதிக வகையில் வளர்க்கப்படுகின்றன.அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நம்நாட்டில் இறால் பண்ணைகள் உள்ளது இறால் மீன்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது .அதனால் நாம் தக்க முறையில் இறால் மீன்களை வளர்த்து லாபம் அடைய முடியும்.
விரால்களில் நிறைய வகைகள் உள்ளன அவற்றுள் மிகவும் முக்கியமானது மேக்ரோ பிராக்கியம் ,ரோசஸ் பெர்க்யம் ஆகியவை ஆகும் . இந்த வகை மீன்கள் வேகமாக வளரக்கூடியவை .குறுகிய காலத்தில் நல்ல எடையும் கிடைக்கும் .அதிக அளவாக ஆண் இறால்கள் 700 கிராம் எடையும் பெண் இறால்கள் 500 கிராம் எடையும் கிடைக்கக்கூடியவை. இவற்றை பரவலான முறையில் நிறைய வளர்த்தால் உற்பத்தி பெருகி ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகமாகும். அதனால் மீன் வளர்ப்போர் நல்ல விலையும் இலாபமும் அடைய முடியும் .
கல் இறால்கள் 
இதில் பல ரகங்கள் உண்டு
பாறை இறால்கள்
மணல் அல்லது மதியடி  இறால்கள்
பவள இறால்கள்
வெளிநாடுகளில் இறால்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இந்த வகை மீன்கள் ஸ்பெயின், கனடா ,வளைகுடா நாடுகள், அமெரிக்காபோன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது .இந்த மீன்களை அதிக உற்பத்தி செய்வதற்காக ஆராய்ச்சியை மத்திய கடல் மீன்பிடி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது .இனி இந்த மீன் வளர்ப்பு முறை பின்வரும் தலைப்புகளில் விரிவாக பார்ப்போம்










No comments:

Post a Comment