வாங்க வேண்டிய மனையில் அடியெடுத்து வைக்கும்
பொழுது உண்டாகும் நல்ல சகுனங்கள்
1.பூமியை வாங்குபவரின் (கட்டிய வீடாயினும் ) வலது கைப்பக்கத்திலும் பல்லி ஒன்று சத்தம் இடுமானால் நல்ல சகுனம் (நிமித்தம் )
2.பல்லியானது இடது கைபுறமிருந்து சத்தம் இட்டாலும் நல்ல சகுனம்
3.காலிமனைக்கு பிரவேசிக்கையில் வெள்ளை நிறப் பசுவோ அல்லது காளையோ மேய்ந்து கொண்டிருக்குமேயானால் அதுவும் நல்ல சகுனம் .
4.வெள்ளை புறா ஒன்று மனைக்கு தென்பட்டாலும் நல்ல சகுனம் .
5.வெள்ளை நிறமான கோழி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தால் நல்ல சகுனம்
6.மனைக்குள் நுழையும் போது காக்கைகள் கரைத்து கொண்டே வலது பக்கத்திலிருந்து இடது கைப்பக்கமான சென்றால் அது நல்ல சகுனம் .
7.மனைக்குள் நுழையும் போது கோழி ,கிளி ,பசு ,கொக்கு ,அணில் ,கழுதை,நரி முயல் வலது கைப்பக்கமிருந்து இடது கைய் பக்கமாக ஓடி சென்றால் நல்ல சகுனங்கள் ஆகும் .
தீயவையான சகுனங்களை பற்றி அறிவோம்
மனையை பார்வையிட கிளம்பும் பொழுது உண்டாகும் .தீய சகுனங்கள் .
1.மனை பார்வையிட போகும்போது ,கணவனை இழந்த ஒரு பெண் எதிரே வந்தால் அது தீய சகுனம் .(விதவை என்பதால் மட்டும் சாஸ்திரங்கள் தள்ளுவதில்லை .ஒரு பிராமணன் எதிரே வந்தால் கூட பண்டிதராயினும் சாஸ்திரம் விலக்க சொல்கிறது .ஒருவராக வண்ணான் வந்தால் அவரை சாஸ்திரம் நல்ல சகுனமாக கூறுகிறது .எனவே சாஸ்திரங்கள் ஒருவரை சார்ந்து இருப்பது இல்லை என்பது உண்மை )
2.எருமை மாடுகள் வந்தால் ,அது தீய சகுனம் .
3.நோய் உள்ளவர்கள் எதிரே நடந்து வந்தால் ,தீய சகுனம் .
4.போதை அருந்தியவர்கள் எதிரே வந்தால் அது தீய சகுனம் சாஸ்திரங்கள் மது குடம் எதிரே வரலாம் எனக் கூறுகிறது .ஆனால் மது அருந்தியவர்கள் எதிர்படுவதை அபசகுனமாகக் கூறுகின்றது .இப்படி பார்க்கையில் மது என்பது தேன் என்று பொருள் கொள்ளவது சரியானதாக இருக்கலாம் .
5.யாசகம் கேட்பவர் எதிரே வருவது தீய சகுனம் .
6.வெட்டியான் அல்லது மாயணக் காவலன் ,மீன் வலையுடன் கூடியவன் எண்ணெய் உடலில் பூச்சியவன் ,எண்ணெய் உற்பத்தி செய்பவன் போன்றவர்களுக்கு எதிர்படுவது தீய சகுனம் .
7.தலைமுடி விரித்த கோலத்தில் உள்ள பெண் எதிர்படுவது தீய சகுனம் .
8.மொட்டை அடித்த சன்யாசி எதிரே வருவது தீய சகுனம் .
சகுனங்கள் என்பது நமக்கு வரக்கூடிய நல்லது கெட்டதை தெரிவிப்பவை பூனை எதிரே வருவது கெட்ட சகுனம் என்று கொள்ளும் பொழுது ,பூனையை அடித்து விரட்ட வேண்டாம் .நமக்கு வரும் துன்பத்தை நமக்கு வேண்டிய தேவதைகள் பூனை உருவில் வந்து தெரிவிகின்றன.
எனவே சகுனம் படுவது கெடுதல் ஆனாலும் அதனை நமக்கு தெரிவிப்பது நமக்கு நல்ல தேவதைகளே .
எனவே சகுனத்திற்கு காரணமானவர்களை இகழ்வது கூடவே கூடாது அவ்வாறு இகழ்ந்தால் தேவதைகளை பழித்த பாவத்திற்கு ஆளாக நேரிடும் .
நல்ல சகுனங்கள் இருந்தால் மேற்கொண்ட செயல்கள் நல்ல விதத்தில் முடியும் .
தீமையான சகுனமாக தென்பட்டால் பூமி வாங்குவதை ,கட்டுவதை பார்வையிடுவதை தள்ளிப் போடலாம் .
மேஷம் ,ரிஷபம் ,மிதுனம் ,கடகம் ,சிம்மம் ,கன்னி ,துலாம் ,விருச்சகம் ,தனுசு மகரம் ,கும்பம் ,மீனம் ஆகிய 12 ராசிகளுக்கு சொல்லப்பட்டுள்ள மனை விவரம்
கிழ்கண்ட ராசிகளுக்கு உரிய வீட்டின்
வாயில் அமையும் திசைகள் எவை
மேஷம் - வடக்கு ,மேற்கு
ரிஷபம் - கிழக்கு ,வடக்கு
மிதுனம் - கிழக்கு ,வடக்கு
கடகம் - கிழக்கு ,வடக்கு
சிம்மம் - கிழக்கு ,தெற்கு
கன்னி - கிழக்கு ,தெற்கு
துலாம் - கிழக்கு ,தெற்கு
விருச்சிகம் - தெற்கு ,மேற்கு
தனுசு - தெற்கு ,மேற்கு
மகரம் - தெற்கு ,மேற்கு
கும்பம் - வடக்கு ,மேற்கு
மீனம் - வடக்கு ,மேற்கு
அவரவர் ராசிப்படி வீடுகட்ட துவங்ககூடாத மாதங்கள் ?
ரிஷபம் - வைகாசி
மிதுனம் - ஆனி
கடகம் - ஆடி
சிம்மம் - ஆவணி
கன்னி - புரட்டாசி
துலாம் - ஐப்பசி
விருச்சிகம் -கார்த்திகை
தனுசு - மார்கழி
மகரம் - தை
கும்பம் - மாசி
மீனம் - பங்குனி
வாஸ்து புருஷன் வருடத்தில் 8 நாட்கள் கண் விழித்திருக்கின்றார் .கண் விழித்தவுடன் ஐந்து விதமான காரியங்களை செய்கின்றது .அவர் கண் விழித்தது முதல் 3 3/4 (மூன்றே முக்கால் நாழிகை ) கழித்து மீண்டும் நித்திரைக்கு செல்வார் .இதை மணிக்கணக்கில் சொல்வது ஆனால் 11/2 மணிநேரம் கண் விழித்திருக்கின்றார் .
முதல் 3/4 நாழிகை தந்தாவனம் செய்கின்றார் (பல் விலக்குதல் )
இரண்டாவது 3/4நாழிகை ஸ்தானம் செய்கின்றார் (குளித்தல்)
மூன்றாவது 3/4 நாழிகை பூஜை செய்கின்றார் .
நான்காவது 3/4 நாழிகை போஜனம் செய்கிறார் .
ஐந்தாவது 3/4 நாழிகை தாழம்பூ தரிக்கிறார் .
அதன் பின் நித்திரைக்கு செல்வார் .இதில் முதல் 21/4 நாழிகை கழித்து அதன் பின் வாஸ்து புருஷனை பூஜிக்க வேண்டும் .
அதாவது நித்திரை செல்வதற்கு முன் சரியாக 36 நிமிடம் இருக்கும் பொழுது பூஜிக்க வேண்டும் .சிலர் கடைசி 18 நிமிடங்கள் தான் விசேஷம் என்பார்கள் .
வாஸ்து புருஷன் செய்யும் ஐந்து செயல்களின் பொழுது அவரை பூஜித்தால் ஏற்படும் பலன்கள் ?
முதல் 18 நிமிடம் குளித்தல் -ராஜபயம்
இரண்டாவது 18 நிமிடம் -தேவையற்ற துன்பங்கள்
மூன்றாவது 18 நிமிடம் உணவு உட்கொள்ளல்,-பிரச்சனைகள் ,வறுமை
நான்காவது 18 நிமிடம் தாம்பூலம் தரித்தல் -குழந்தை செல்வங்கள் .
No comments:
Post a Comment