சிலர் நாட்டின் பொருளாதார
வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அரசாங்கமே காரணம் என்று குறை குறுகின்றனர் .ஒவ்வொரு
நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தனி மனிதனின் வளர்ச்சியே முக்கிய காரணமாக
அமைகிறது .அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் பணக்கார நாடுகளாக உள்ளன என்றால் அது
அவர்களது நாட்டில் உள்ள மக்களே முக்கிய காரணமாக உள்ளனர் .Microsoft, Google, Apple மற்றும் Facebook போன்ற அனைத்து சாதாரணமான மக்களால்
உருவாக்கப்பட்டது காங்கிரசாக
இருந்தாலும் பாஜக வாக இருந்தாலும் நல்லவழியில்
பயன்படுத்திக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. அரசாங்கம் தொழில் செய்ய
கொடுக்கும் கடன் தொகையினை பெற்றுக்கொண்டபிறகு ஒருவரது முதல் யோசனையே அதை கட்டாமல்
தப்பிப்பது என்பதாகத்தான் உள்ளது. எப்படி முன்னுக்கு வருவது
என்று யோசிப்பது நம் கையில்தான் இருக்கு .
ஒருவர்
ஒரு தொழில் ஆரம்பித்து அவருக்கு நல்ல இலாபம் வந்தால் உடனே டஜன் கணக்கில் அனைவரும்
அதே தொழிலை ஆரம்பித்து ஈ ஓட்டிக்கொண்டு இருந்தால் எப்படி முன்னேற முடியும். உதாரணாமாக தமிழ்நாட்டில் மட்டும் 550 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
பொறியியல் கல்லூரிகள் மட்டும் இவ்வளவு என்றால் மற்ற கல்லூரிகளையும் சேர்த்து
எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பாருங்கள். தேவைக்கு அதிகமாக கல்லூரிகள்
ஆரம்பிக்கப்பட்ட காரணத்தினால்தான் பல கல்லூரிகள் மாணவர்கள் இன்றி கற்றுவாங்கிக்கொண்டு
உள்ளன. எனக்கு தெரிந்தே பலர் நோகாமல்
நோம்பி கும்பிட அதாவது உழைக்காமல் பணம் சம்பாதிக்க மட்டுமே வழிகளை தேடிக்கொண்டு
உள்ளனர்.
No comments:
Post a Comment