ஆடுகளின் பராமரிப்பு முறைகள்
1.வயதை கண்டறிதல் :
பொதுவாக பல் வரிசையைக் கொண்டு ஆடுகளின் வயதை நிர்ணயிக்கலாம் .ஆடுகளின் பற்களை இரண்டுவகையாக பிரிக்கலாம் ;ஒன்று பால் பற்கள் ,மற்றொன்று நிரந்தர பற்கள் .கீழ்தாடைப் பற்களின் எண்ணிக்கையை வைத்தே வயதை கணிக்கலாம் ,மேல் தாடையில் பற்கள் இல்லை .கீழ்க்கண்ட அட்டவணையை வைத்தே ஆடுகளின் வயதை கண்டுகொள்ளலாம் .
வயது பற்களின் எண்ணிக்கை மற்றும் அமைப்பு
பிறந்தவுடன் 0-2 ஜோடி பால் பற்கள்
6-10 மாதம் கீழ்தாடையின் முன்புறம் 8முன்பற்கள் இவை அனைத்தும் பால் பற்கள்
ஒன்றை வயதில் நடுவில் உள்ள இரண்டு முன் பற்கள் விழுந்து நிரந்தரப்பற்கள் முளைக்கும்
இரண்டரை வயதில் நன்கு நிரந்தர பற்கள் காணப்படும் .
மூன்றரை வயதில் ஆறு நிரந்தர பற்கள் காணப்படும் .
4வயதில் எட்டு நிரந்தர பற்கள் காணப்படும் .
6-7வயதில் பற்கள் விழுந்துவிடும் .
அடையாளம் இடுதல் :
ஆடுகளை அதிகமாக வளர்க்கும் போது சரியான பராமரிப்பு மற்றும் அடையாளம் இட வேண்டும் .
1) காதுகளில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத்திலான ஆன அடையாள அட்டைகளை மாட்டுதல் வேண்டும் .
2)வாலில் பச்சை குத்துதல் .
போன்ற முறைகளை கையாள வேண்டும் .
கொம்பு நீக்கம் செய்தல் :
கொம்பு நீக்கம் செய்வதால் கொம்பு உடைத்தல் ,கொம்புகளில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்தலாம் .அத்துடன் கொம்புகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்வதை தடுக்கலாம் .கிடைக்குட்டிகள் பிறந்து 2-5 நாட்களுக்கும் ,பெட்டைக்குட்டிகளுக்கு 12 நாட்களுக்கும் கொம்பு நீக்கம் செய்தல் வேண்டும் .கொம்பு வளரும் இடம் புண்ணாகும் வரை காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஸ் கொண்டு தேய்க்க வேண்டும் .எக்காரணம் கொண்டும் கண்களில் படாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும் .கொம்பு நிக்கும் போது மின்சார கொம்பு நிக்கியை பயன்படுவது மிகவும்நல்லது .வயது மூதிரிந்த ஆடுகளுக்கு ரம்பம்கொண்டு கொம்பு நீக்கம் செய்வது மிகவும் நல்லது .இப்படி செய்யும் போது ஈக்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
காயடித்தல் :
இனப்பெருக்கருக்கத்திற்கு தேவையாயில்லாத கிடாக்களை காயடித்து விடலாம் .கிடாக்களை காயடிக்கும் சரியான வயது 4-6 மாதங்கள் ஆகும் .பர்டிஸோ கருவி மூலம் காயடித்தல் நோய் தொற்று அபாயங்கள் குறையும் .
பயன்கள் :
உடல் எடை விரைவாக அதிகரிக்கும் .
ஆட்டு தோலின் தரம் உயர் மதிப்பு கொண்டதாக இருக்கும் .
இறைச்சி சுவை அதிகமாக இருக்கும் .
பயிற்சி :
3-4 மணி நேரமாவது ஆடுகளை திறந்த வெளியில் திரிய விட வேண்டும் .சூரியன் மறந்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகும் ,பனித்துளி இருக்கும் போதும் ஆடுகளை மேயவிடுதல் கூடாது .இராமனை புற்களில் மேயும் போது குடல் அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு .
நகங்களை வெட்டுதல் :
ஆடுகளை நன்கு பராமரிக்க நகங்களை வெட்டி விடுதல் வேண்டும்.நகங்களை கத்தி அல்லது கத்தரி கோல் கொண்டு வெட்டிவிட வேண்டும் .நகங்களை வெட்டாமல் இருந்தால் காலை வலவீனப்படுத்தும் .
பெட்டை ஆடுகளை தெரிவு செய்தல் :
பெட்டை ஆடுகள் இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்கு நல்ல உடல் அமைப்பை பெற்றிருக்க வேண்டும் .உடல் நல்ல வளர்ச்சியுடனும் நன்கு கால்களை நன்கு ஊன்றி நடக்க கூடியதாக இருக்க வேண்டும் .தோல் நன்கு தளர்ச்சியாக ,வழவழப்பாக ,மிருதுவாக இருக்க வேண்டும் .பெட்டைஆடுகள் சாதுவான பெண்மை தோற்றத்துடனும் இருக்க வேண்டும் .காம்புகள் முன்னோக்கி சற்று கூர்மையாக்கி இருக்கும் .

No comments:
Post a Comment