Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Tuesday, 17 March 2020

வெள்ளாடுகளுக்கு தேவையான தீவனங்கள் :

வெள்ளாடுகளுக்கு தேவையான தீவனங்கள் :

1) தீவன தேவை :
                  4 முதல் 5%காய்வு நிலையில் தீவனங்களை வெள்ளாடுகள் ஏற்கும் .1 முதல் 1.25 கிலோ தீவனம் 25கிலோ தீவனம் தேவைப்படும் .இதனை பசுந்தழை ,கலப்பு தீவனம் ,உலர்ந்த தீவனம் மற்றும் புசுந்தழை தீவனமாக கீழ்கண்டவாறு வழங்கலாம் .
காய்வு நிலையில்
கலப்பு தீவனம் 250 கிராம் காய்வு நிலையில்      0.75கிலோ
புசுந்தழை /புல் 3 கிலோ காய்வு நிலையில்         0.25கிலோ
உலர்ந்த தீவனம் 300கிராம் காய்வு நிலையில்   0.24கிலோ
காய்வு நிலையில் மொத்தம் 1.24கிலோ

2)தீவன பராமரிப்பு :
              பசுந்தீவனம் பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பிற்கு முக்கிய பங்கு வகிகிறது .விவசாயிகளின் தீவன பற்றாக்குறையால் தன வெள்ளாடு வளர்ப்பு மிகவும் குறைந்து வருகிறது .என்னவே 4ஏக்கர் பசுதீவனத்திற்கு 100ஆடுகள் வளர்க்க படுகிறது .வரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாயநிலமாக இருக்க வேண்டும் .

3)பசுந்திவன வகைகள் :
            வேலிமசால் ,குதிரைமசால் வகைகள் ,தீவன சோள புல் வகைகள் ,அகத்தி ,கோ -3, கோ -4,சவுண்டல் ரகங்களை வளர்க்கலாம் .இதனை 50 சென்ட் நிலத்தில் ஓவற்றையும் வளர்க்கலாம் .முதல் 60 முதல் 70 நாட்கள் குறைந்த படசம் ,80 முதல் 90 நாட்கள் தேவைப்படும் .இதற்கு பின்பு ஆடுகளை வாங்கித்தர வேண்டும் .

4)அடர் தீவனம் :
               அடர் தீவனம்  வெள்ளாடுகளுக்கு கொடுக்கவேண்டும் .25கிராம் முதல் 35கிராம் திவானாம் 3 முதல் 6மாத குட்டிகளுக்கு கொடுக்கவேண்டும் .6முதல் 12 மாதம் வரையில் 50 கிராம்முதல் 100கிராம் வரையிலும் ,சினைப்பருவத்தில் 175கிராம் ,ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300கிராம் என்ற அளவில் அளிக்க வேண்டும்.

   மேலும் சில மாற்று தீவனகள் :          
        ஆடுகளின் உடல் எடையை பொறுத்து தீவனங்களை கொடுக்கலாம் .

புளியன்கொட்டை :
        புளியன்கொட்டையை தோல் நிக்கி அரைத்து கொடுக்கலாம் .இது மிகசிறந்த மாட்டுத்தீவனம் .வீட்டில் உள்ள புளியன்கொட்டையை குறைந்த விலைக்கு விற்று அதிக விலைக்கு ஆட்டு தீவனம் வாங்குவது சரியில்லை .

வேலிக் கருவை நெற்றுகள் :
          இதில் 15/25%சர்க்கரைப்பொருள் உள்ளதால் ,தினம் 100/200 கிராம் மட்டுமே கொடுக்கலாம் .இதுவும் சிறந்த ஆட்டு தீவனம் .

பிண்ணாக்கு :
         எள்ளு பிண்ணாக்கு ,கடலை பிண்ணாக்கு , சோயா பிண்ணாக்கு ,தேங்காய் பிண்ணாக்கு மற்றும் பருத்திக்கொட்டை பிண்ணாக்கு பயன்படுத்தலாம் .
தவிடு :
          கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு கொடுக்கலாம் .

தானிய வகைகள் :
               சோளம் ,கம்பு ,மக்காசோளம் ,கேழ்வரகு போன்ற நவதானியங்களை மாட்டு தீவனங்களாக பயன்படுத்தலாம்  . இதன் மூலமாக பிண்ணாக்கு சேர்ப்பதை தவிர்க்கலாம் .தலையில் கிடைக்காத பாஸ்பரஸ் இதில் கிடைக்கும் ,எல்லா பிண்ணாக்குகளும் வெள்ளாட்டுக்கு ஏற்றவையாக இருக்காது .

கலப்பு தீவனம்: 
          பெரும்பாலும் வெள்ளாடுகளுக்கு கலப்பு தீவனம் கொடுப்பதில்லை .ஒரு சில பண்ணையாளர்கள் மாடுகளை போன்றே வெள்ளாடுகளுக்கு கலப்புத்தீவனம் கொடுகின்றனர் .வெள்ளாடு வளர்ப்பவர்கள் தாங்களாகவே கலப்பு தீவனம் தயாரித்து கொள்ளலாம் .அதில் 1%உப்பு 2%தாது உப்பு செய்கவேண்டும் .

வேர்கடலை கொடி:
       கடலை கொடி ஒரு சிறந்த தீவனமாக ஆடு மற்றும் மாடுகளுக்கு கொடுக்கப்படுகின்றார் . இது ஒரு சிறந்த காய்ந்த தீவனமாகும் .

துவரை இலை :
   துவரை இலையை தீவனமாக கொடுக்கலாம்  .அதனுடன் பருத்தி இலையையும் தீவனமாக கொடுக்கலாம் .மற்றும் மொச்சை ,அவரை செடிகளில் உதிரிந்த இலைகளை வெள்ளாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம் .

No comments:

Post a Comment