Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Wednesday, 18 March 2020

வெள்ளாடு வளர்ப்பு :

வெள்ளாடு வளர்ப்பு :

வெள்ளாடு "ஏழைகளின் பசு " என்று அழைக்கப்படும் .பசுக்களையும் ,எருமலைகளையும் மேட்டுபாகனா நிலங்களில் வளர்க்க முடியாது .குறைந்த முதலீட்டை கொண்டு நல்ல லாபம் பெறலாம் .

யார் தொடங்கலாம்?
நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள் .
மானாவரி மேச்சல் நிலங்கள் உள்ள இடங்கள் .
நன்மைகள் :
  • ஆடு வளர்ப்பு அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும் .சி.றிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது .அதிக பராமரிப்பு தேவையில்லை .
  • வெள்ளாட்டிலிருந்து கறி மற்றும் பால் இரண்டிலும்  வருமானம் கிடைகிறது .
  • சராசரியாக ஒரு ஆட்டிலிருந்து 22-30 கிலோ கறி கிடைகிறது .இது அனைத்து விதமான மக்களும் உண்ணக்கூடிய இறைச்சி .
  • வருடம் முழுவதும் வேலை .
  • நல்ல எரு கிடைகிறது .
  • உடனடி வருவாய் மற்றும் குறைந்த முதலீடு .
வெள்ளாட்டு இனங்கள் 
சிறந்த இந்திய இனங்கள் 
  • வங்காள ஆடு -மேற்கு வங்காளம் 
  • சூர்தி -குஜராத் 
  • பிட்டல் -பஞ்சாப் 
  • காஸ்மீர் -ஜம்மு காஸ்மீர் 
  • ஜம்னாபாரி -எட்டவா  மாநிலம் ,உ .பி 
  • பார்பரி -உ .பி .யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்தெளிசேரி 
குடற்புழு நீக்கம் :
  • பொலிவற்ற தோற்றத்துடனும் மற்றும் ஒல்லியான ஆடுகளில் குடற்புழு தாக்கம் அதிகமாக இருக்கும் .எனவே அந்த ஆடுகளை இனப்பெருக்கத்திற்கு முன் குரைப்புழு நீக்கம் செய்ய வேண்டும் .
  • முதல் இரண்டு மாதங்களில் குடற்புழு நீக்கம் செய்தால் சினை ஆடுகளுக்கு கரு  சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு .
  • பிறந்த குட்டிகளுக்கு 30 நாட்களிலும் பிறகு 60 நாட்களிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் .
தடுப்பூசிகள் :
  • துள்ளுமாரி மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை ஆடுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும் .
  • பிறந்த 8 வாரமும் ,பிறகு 12 வாரமும் துள்ளுமாரி மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளைகுட்டிகளுக்கு போட வேண்டும் .
  • துள்ளுமாரி மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளைகுட்டிபோடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் ,இனப்பெருக்கத்திற்கு 4-6 வரத்திருக்கும்போட வேண்டும்.·                
கொட்டகை பராமரிப்பு :
  •  அழ்கூள  முறை மரத்தூள் ,கடலை பொட்டு ,மற்றும் நெல் உமி ஆகியவை தரையில் 6செ .மீ உயரத்திற்கு தரையில் இட்டு வளர்க்கவும் .
  • உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக்கொள்ளவும் .
  • இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கூளம் போடவேண்டும் .
  • குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம்  வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு  அளிக்க வேண்டும் .
உயர் மட்ட தரை முறை
·   தரையிலிருந்து 34 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
·   ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்.
இனப்பெருக்க பராமரிப்பு :
  • அதிக எடை கொண்ட ஆடு மற்றும் வேகமாக வளரும் ஆடுகளை வளர்க்க வேண்டும்.
  • 1 வருட வயதில் பெட்டை ஆடுகளை பயன்படுத்த வேண்டும் .
  •  குட்டிபோட்ட 3 மாதத்திற்கு பிறகு இணைசேர்க்கை செய்யவேண்டும் 
  • சினை பருவகாலம் 18-21 நாட்கள் வரும் . அது 24-72 மணி காலம்நீடிக்கும் .
  •  பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  •                குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
   ·  சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
      ·         சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
·   சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.  

வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல் : 
ஜமுனாபாரி 

  • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியை மட்டும் இனும் .
  • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ .
  • தினம் 2.25 லிட்டர் பால் கொடுக்கும் .
  • காதுகள் மிக நீளமானது .
  • நல்ல உயரமானது .
  • ரொமானிய மூக்கடைப்பு கொண்டவை .


தலைச்சேரி / மலபாரி
·        வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
·      2-3 குட்டிகளை போடும் திறன்
·        கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ


போயர்
·     இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
·      வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
·      கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.  
·     குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்
.
வெள்ளாடுகளை தேர்வு செய்தல்
பெட்டை ஆடுகள்
·    2-3 குட்டிகள் ஈனும் திறன்
·    6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை
கிடாக்கள்
·      தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
·   9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
·   நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
·    2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து

தீவனப் பாரமரிப்பு
·        வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
·     கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
·      தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
·      ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
·    அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.

குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37
15
52
35
பருப்பு வகைகள்
15
37
---
---
புண்ணாக்கு
25
10
8
20
கோதுமை தவிடு
20
35
37
42
தாது உப்பு
2.5
2
2
2
உப்பு
0.5
1
1
1
மொத்தம்
100
100
100
100
·                     குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
·                     வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
·                     சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
·                     தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
·                     அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்



No comments:

Post a Comment