Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Tuesday, 17 March 2020

பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பது எப்படி ?

பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பது எப்படி ?

பரண்மேல் ஆடு
ஆட்டு பாலில் உள்ள சக்தியானது ,  தாய்ப்பாலுக்கு சமமான புரத சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியானது பசுவின் பாலுக்கு நிகராக இருப்பதால் ஆட்டு பாலில் அதிக படியான சத்துக்கள் உள்ளது .
நமது குடியிருப்புக்கு பகுதியில் போதிய இட வசதி இல்லாத போதும் ,மிக  சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்க தற்போது பரண்மேல் ஆடு வளர்க்கும் முறை பிரபலமாக உள்ளது .ஆடுகள் வளர்ப்பது மட்டும் அல்லாது தற்போது விவசாயம் கூட ,போதிய இட வசதி இல்லாமல் வீட்டின் மேற்பரப்பில் இதே போல் பரண் அமைத்து அறுவடை செய்து வருகின்றனர் .
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பாக நமது வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் பெரும் பங்கு வகிக்கின்றன .தற்போது கால்நடை வளர்ப்பு என்பது இளைனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அடைந்துள்ளது தற்போதைய காலகட்டத்தில் ஆடு வளர்த்தல் என்பது நல்ல வருமானம் தரும் தொழிலாக உள்ளது .தற்போது நவீன முறையில் ஆடுகள் வளர்ப்பது பற்றிய தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருகிறது .

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு :
இந்த பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு என்பது ஆடுகளை தரையில் இருந்து 5அடி உயரத்தில் கிடைமட்டமாக மரசட்டங்களை 2க்கு  1.5 அடி இஞ்ச் அளவில் 2 விரல் இடைவெளியில் வரிசையாக கட்டி அமைக்க வேண்டும் .இவ்வாறு செய்வது பரண்மேல் ஆடு வளர்த்தல் முறை ஆகும் .மேலும் ,இதற்காக தேரிந்தெடுக்கப்படும் மரமும் முக்கியம் .50அடி நீளம் ,45 அடி அகலம் உடைய கொட்டகை சுமார் 100 ஆடுகள் வளர்க்க தேவைப்படுகிறது .அதில் 22க்கு 15இஞ்ச அளவில் கொட்டகை இளம் குட்டிகளை வளர்க்க தேவைப்படுகிறது .

தீவன பராமரிப்பு  :
பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு முறையில் பசுந்திவனங்கள் முக்கிய பங்கு வகிகின்றனர் .வெள்ளாடு வளர்ப்பு திவான பற்றாக்குறையால் பெருமளவு குறைந்துள்ளது .எனவே 4ஏக்கர் பசுந்திவனங்கள் 100 ஆடுகளை வளர்க்க உதவுகிறது .வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய நிலமாக இருக்க வேண்டும் .
பசுந்திவன வகைகள் :
குதிரை மசால் வகைகள் ,வேலிமசால் ,தீவன சோலா புள் வகை ,கோ -3,கோ -4,சவுண்டல் ரகங்களை வளர்க்கலாம் .பண்ணை அமைப்பதற்கு முன் பசுந்திவங்களை பயிரிட வேண்டும் .ஏனென்றால் முதல் அறுவடை 60 முதல் 70 நாள் வரையிலும் ,80 முதல் 90 நாள் அதிகபடசமும் தேவைப்படும் .இந்த இடைவெளியில் நாம் கொட்டகை அமைத்து கொள்ளவேண்டும் அதன் பிறகே  ஆடுகளை வாங்கி வர வேண்டும் .

அடர் தீவனம் :
 அடர் தீவனங்கள் வெள்ளாடுகளுக்கு கொடுக்கவேண்டும் .25கிராம் முதல் 35 கிராம் வரை 3முதல் 6 மாத குட்டிகளுக்கு கொடுக்கலாம் .50 கிராம் முதல் 100 கிராம் வரை ,6 முதல் 12 மாத குட்டிகளுக்கு கொடுக்கலாம் .மக்காசோளம் ,ராகி ,கம்பு துவரம் பொட்டு பாசி பொட்டு போன்றவை அதிகளவில் கொடுக்கலாம் .

நோய் பராமரிப்பு :
தடுப்பூசி ஆண்டுக்கு நான்கு முறை கட்டாயமாக போட வேண்டும் .கால்வாய்கான தடுப்பூசியை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் போடவேண்டும் .,பிபி ஆர் தடுப்பூசி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் போடா வேண்டும் .துள்ளுமாரி தடுப்பூசி அக்டோபர் மாதத்தில் கட்டாயமாக போடவேண்டும்




No comments:

Post a Comment