Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Thursday, 19 March 2020

தைராய்டு பிரச்சனை நீங்க மருத்துவ குறிப்பு :

தைராய்டு பிரச்சனை எவ்வாறு ஏற்படுகிறது என்றால் ,நம் தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி அளவு அதிமாகவோ  மற்றும் குறைவாகவோ  தைராக்சின் எனும் ஹார்மோனை இந்த தைராய்டு அல்லது தைராய்டு குறைவு என்னும் நோய் உருவாகிறது .
தற்போதைய சூழலில் பலரும் இந்த தைராய்டு பிரச்சனையில் சிக்கியுள்ளனர்
இந்த பிரச்சனையை சரி செய்ய நவீன மருத்துவ முறைகள் இருக்கின்றன அதில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் .நவீன முறைகள் பல இருந்தாலும் இந்த தைராய்டு பிரச்சனை எந்த குறைபாட்டினால் வருகிறது என்பதை பற்றி பார்போம் .
தைராய்டு குறைபாட்டினால் நமக்கு முதலில் வரும் அறிகுறி என்னவென்றால் கழுத்தின் இரு புறமும் வீக்கம் காணப்படும் .இதற்கு காரணம் கழுத்தில் இருக்கும் நீண நீர் அளவு குறைவது ஆகும் .இந்த வீக்கமானது தைராய்டு வருவதற்கு முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது .
நாம் சரியான அளவு உணவு எடுத்துக்கொண்டாலும் நமது உடலின் எடை கூடவா அல்லது குறையவோ இருக்க கூடாது ,அவ்வாறு இருப்பின் அது தைராய்டு வந்ததன் அறிகுறி ஆகும் .ஒருவருக்கு தைராய்டு நோய் இருப்பின் அவரின் உடல் நிலை எப்பொழுதும் அசதியாக இருக்கும் .வழக்கம் போல் இல்லாமல் இதய துடிப்பின் வேகம் சற்று குறைவாக இருப்பது போல் இருக்கும் .சிலருக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படும் .மேலும் இயற்கை உபாதைகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது .தைராய்டு நோய் வருவதை தவிர்க்க நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் கலந்த உப்புக்களை பயன்படுத்த வேண்டும் .
கீரை வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் ,பசலை கீரை என்ற ஒரு கீரை வகை அதிகப்படியான பசலை சத்துக்களை கொண்டது .இந்த கீரை வகையை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் தைராய்டு குறைபாடு நீங்கி விடும் .நம் வாழ்வில் தினம் தோறும் சமையலில் சேர்க்கும் பூண்டு தைராய்டு குறைபாட்டை சமன் செய்யும் .இந்த பூண்டில் "செலீனியம்" என்னும் வேதிப்பொருள் உள்ளது அது இந்த குறைபாட்டை சரி செய்ய வல்லது .
வெளிநாடுகளில் அதிகமாக உண்ணப்படும் காய் வகைகளில் சோயாபீன்ஸ் ஒன்று .இந்த சோயாபீன்ஸ் பல சத்துக்களை கொண்டது .இந்த காய் வகை நமது நாடுகளில் தற்போது அதிக படியாக கிடைக்கிறது .இந்த சோயாபீன்ஸ் காய்வகை தைராய்டு பிரச்சனைக்கு நல்ல நிவாரணியாக உள்ளது .
தைராய்டு பிரச்சனை ...தவிர்க்க வேண்டியது ...சேர்க்க வேண்டியதும் !!!
தைராய்டு என்பது நமது உடலில் தேவையான ஹார்மோன்களை சுரக்கும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு எனப்படும் .நமது உடலில் முன்கழுத்தின் மூச்சுக்குழல் பகுதியில் இது அமைந்து உள்ளது .
இங்கு சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைப்பதற்கும் ,நமது உடலில் ஏற்படும் தேவை இல்லாத வளச்சிதை மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது .
தைராய்டு பிரச்சனை :

தற்போதைய வாழ்வில் அனைவரும் சந்தித்து வரும் நோய்களில் அதிகப்படுத்தக உள்ளது இந்த தைராய்டு பிரச்சனை,அனைத்து வயதினரையும் பாதிப்பில் விடுகிறது  .குறிப்பாக இந்த வியாதி பெண்களுக்கு அதிக படியாக உள்ளது .தைராய்டு அதிகமாக சுரந்தால் ஹைப்பர்தைராய்டியம் என்றும் குறைவாக சுரந்தால் ஹைப்போ தைராய்டியம் என்றும் மருத்துவர் தெரிவிக்கின்றனர் .
அறிகுறிகள் 
நமது உடலில் தைராய்டு சுரப்பி அதிகமாக இருந்தால் உடல் அதிக
சோர்வாகவும் ,உடல் எடை குறைவும் ஏற்படும் .பிறகு  நமது செயல்பாடுகள் மந்தமாகவும் இருக்கும் .அதே போல் தைராய்டு குறைவாக சுரந்தால் உடல் எடை அதிகரிக்கும் ,பதற்றம் ஏற்படுவது இதன் அடிப்படை அறிகுறிகள் ஆகும் .
பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் ,கருச்சிதைவு ,கருச்சிதைவு போன்றவை ஏற்படும் .
காரணம் 
இந்த நோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது நம் உணவில் அயோடின் குறைவு மற்றும் மனஅழுத்தம் ,மரபியல் குறைபாடு போன்றவை ஆகும் .நமது உணவில் அயோடின் சத்துக்களை அதிக அளவில் எடுத்து கொண்டால் எந்த வித பாதிப்பும் இல்லை .தைராய்டு நோயாளிகள் அதற்கான மருந்துகளை எடுத்து கொள்வதோடு ,உணவில் அயோடின் சத்துக்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் .
சேர்க்க வேண்டிய உணவுகள் :
பால் 
நம் உடலில் சுரக்கும் தைராய்டு சுரப்பிகள் சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்தானது மிகவும் அவசியமான ஒன்று .அன்றாட வாழ்வில் தினமும் கொழுப்பு சத்துக்கள் நீங்கிய பால் பருகுவதால் ஒரு பங்கு அயோடின் சத்துக்கள் பூர்த்தி செய்யப்படும் .
இறைச்சி 
நம் உடலில் துத்தநாக சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டால் இந்த தைராய்டியம் ஏற்படும் .நமது சமையலில் சாதாரண உப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக அயோடின் கலந்த உப்புக்களை பயன்படுத்தலாம் .கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறியில் அதிக அளவு துத்தநாக சத்துக்கள் உள்ளது .
முட்டை 
முட்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் அதில் 18%அயோடின் சத்துக்கள் உள்ளது மற்றும் தைராய்டு சுரப்பதற்கு மிகவும் தேவையாக உள்ளது .
தானியங்கள் :
தானியங்களில் ப்ரௌன் அரிசி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் வைட்டமின் பி சத்துக்கள் உள்ளது .இந்த வகை தானியங்களை அதிகம் பயன்படுத்துவதால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் .
தவிர்க்கவேண்டிய உணவுகள் :
பாஸ்ட் ஃபுட் 
நமது அன்றாட வாழ்வில் அவசர யுகத்தில் தற்போது பாஸ்ட் ஃபுட் என்பது உணவாக போய்விட்டது .அதில் உள்ள கொழுப்பு சத்துக்கள் தைராய்டு நோய் உள்ளவர்கள் சிறிதளவு சாப்பிட்டால் கூட அது தைராக்சின் ஹார்மோன்களை உற்பத்தி செய்து விடும் .அது உடும்புக்கு மிகவும் தீங்கு தரக்கூடியது .
இந்த துரித உணவில் அதிக உப்புகள் இருந்தாலும் அதில் போதுமான அயோடின் சத்துக்கள் இருப்பது இல்லை .
பதப்படுத்தப்பட்ட உணவுகள் :
தற்போது அனைவரும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவில் பயன்படுத்துவதால் அதில் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது அதிக சோடியம் கலவை இருக்கும் ஆனால் அயோடின் சத்துக்கள் இருப்பது இல்லை
பேக்கரி உணவுகள் :
பேக்கரி உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது .அதில் கிடைக்கும் ப்ரெட் வகையில் அதிக அயோடின் இருந்தாலும் அதை உண்பதால் நமக்கு செரிமானத்தில் தீங்கு ஏற்படும் .இதனால் தைராய்டு சுரப்பியில் பிரச்சனை ஏற்படும் .
சல்பர் உணவுகள் :
சோளம் ,சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவைகளை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் ,இந்த உணவு பொருள்கள் தைராய்டு சுரபியினால் அயோடினை உறிஞ்ச முடியாமல் போய்விடும் .எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது .

























No comments:

Post a Comment