Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Wednesday, 18 March 2020

மேய்ச்சல் :
ஆடுகள் மதிய நேர வெயிலில் அதிகப்படியாக சோர்ந்துவிடும் என்பதால் ஆடுகளை மதிய நேரத்தில் பட்டியில் அடைத்து விடுவது நல்லது .அந்த பட்டியில் உள்ள ஆடுகளுக்கு மத்திய உணவாக பசுந்தீவனங்களை நறுக்கி போடுதல் நல்லது .வெயிலின் தாக்கம் குறைந்தவுடன் 3மணி முதல் ஐந்து மணி வரை ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம் .மதிய உணவுதினமும்  மாற்றி மாற்றி கொடுப்பது நல்லது .
இனபெருக்கம் :
ஆடு வளர்ப்பு நல்ல லாபத்தை இட்ட நாம் வளர்க்கும் ஆடுகள் 2ஆண்டுக்கு 3 முறையாவது குட்டிகள் போட வேண்டும் .
நாம் ஆடுகள் வாங்கும் போது அதிக இனபெருக்கம் உள்ள ஆடுகள் மற்றும் வேகமாக வளரும் தன்மை ,அதிக எடை கொண்ட ஆடுகளை வாங்குவது நல்லது .
ஆடுகள் குட்டி ஈன்ற 3மாதத்திற்கு பிறகு இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்தலாம் .அவ்வாறு செய்தால் மட்டுமே 2ஆண்டிற்கு 3குட்டிகளை ஈனும் .
குட்டிகளை 1வருடத்திற்கு பிறகு இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த
 வேண்டும் .
சினை பருவகாலம் 20-25நாட்களில் இடைவெளியில் வரும் .25முதல் 79மணி வரை இந்த காலம் நீடிக்கும் .
சினை பருவத்தில் ஆடுகளுக்கு வலி இருப்பது போல சத்தமிட்டு கத்தி கொண்டிருக்கும் .இனப்பெருக்க உறுப்பு சற்று சிவந்தும் வீங்கியும் இருக்கும் .
இது மட்டும் அல்லாது தீவனம் உண்ணாமலும் அடிக்கடி சிறுநீர் கழித்து கொண்டு இருக்கும் .
அது மட்டும் அல்லாது வாலை ஆட்டி கொண்டு இருக்கும் .
இவ்வாறு ஆடுகள் சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-20 மணி நேரத்தில் அதனை இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் .
குடற் புழு நீக்கம் 
நாம் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியான உடல் அமைப்பை கொண்டுள்ள  ஆடுகளுக்கு குடற் புழு தாக்கம் இருக்கும் .அவ்வாறு குடற்புழு இருக்கும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்த பிறகு இனபெருக்கம் செய்ய வேண்டும் .
ஆடுகளை இனப்பெருக்கத்திற்கு முன்பேயே குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் .ஏன் என்றால் இனப்பெருக்கத்திற்கு பின் குடற்புழு நீக்கம் செய்தல் கரு சிதைவு ஏற்படும் .
கரு அடைந்த ஆடுகள் குட்டிகளை பெறுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் .
பிறகு குட்டிகள் ஈன்ற 30-60 நாட்களில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் .
தடுப்பூசிகள் :
துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் ஊசிகளை குட்டிகள் போடுவதற்கு முன்பும் இனப்பெருக்கத்திற்கு முன்பும் போடுவது ஆடுகளுக்கு நன்மைதரும் .
இந்த தடுப்பூசிகளை பிறந்த குட்டிகளுக்கு 8 ஆவது வாரம் மற்றும் 12 ஆவது
வாரம் போட வேண்டும் .
வருடம் ஒரு முறை இந்த தடுப்பு ஊசிகளை கிடாய்களுக்கு போடுவது நல்லது
வெள்ளாடு காப்பீடு திட்டம் :

நாம் வளர்க்கும் ஆடுகளுக்கு நான்கு மாத வயது ஆன உடன் அதனை காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் .
இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் நம் ஆடுகளுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் நோய் ஏற்பட்டால் அதற்கு காப்பீடு திட்டத்தின் படி தொகையை பெற்று கொள்ளலாம் .

வங்கி கடன் :
ஆடு வளர்ப்பதற்கு அரசு சார்ந்த நிதி நிறுவனங்களுடன் வங்கி கடன் கொடுக்கிறது .வங்கியில் கடன் தர முதலில் திட்ட அறிக்கை கேட்பார்கள் .இந்த திட்ட அறிக்கை நமக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கிடைக்கும் .ஆடு எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றிய பயிற்சிகளை கால்நடை மருத்துவரிடம் பெற்று கொண்டு அதற்கான சான்றிதழ்களை ,மாதிரி அட்டைகளையும் பெற்று கொள்ள வேண்டும் .இந்த திட்ட அறிக்கை வங்கி கடன் பெற உதவியாக இருக்கும் .
































No comments:

Post a Comment