Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 16 March 2020

ஆடு வளர்ப்பு சிறப்பு வாழ்வாதாரம்

ஆடு வளர்ப்பு சிறப்பு வாழ்வாதாரம் :
பதினைந்து சதுர அடி தேவை படுகிறது வளர்ந்த ஒரு ஆட்டுக்கு .நம் தேவைக்கு ஏற்றாற்போல் பட்டி அமைத்துக்கொள்ளலாம் .வெள்ளாட்டுக்கு சுவர் அல்லது கம்பி வேலி அமைக்க வேண்டும் ,செம்மறி ஆடாக இருந்தால் நைலான் வலையிலே பட்டி அமைத்துக்கொள்ளலாம் .ஒன்பது மணிக்குள் ஆடுகளை மேச்சலுக்கு கொண்டுசெல்லவேண்டும்,குட்டிகள்,சின்ன ஆடுகள் ,கிடாக்கள் என தனித்தனியாக கொட்டைகள் அமைக்க வேண்டும் .
தண்ணிர் சுத்தமாக இருக்கவேண்டும் ,இல்லையையென்றால் ஆடுக்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.பதினொரு மணியளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம்  கொடுக்கவேண்டும் .

பின்  கடலை பிண்ணாக்கு ஊற்றி தண்ணீர் கொடுக்க வேண்டும் .வெயில் நேரங்களில் அட-ஆடுகளை பட்டியில் அடைத்து வேலி மசால் ,,முயல் மசால் மற்றும் கோ -4போன்ற  தீவனங்களை கொடுக்க வேண்டும் ஏனென்றால் வெயில் நேரங்களில் ஆடு மேச்சலுக்கு சென்றால் ஆடு சோர்ந்து போய்விடும் .பகல் மூன்று மணி முதல் ஐந்தரை மணிவரை மேச்சலுக்கு அனுப்பலாம் .

பருவமாற்றத்திற்கு தேவையான தடுப்பூசியை கட்டாயம் போட்டு வரவேண்டும் .குடற்புழு நீக்கம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும் .அடிக்கடி தீவனங்களை மாற்றி கொடுப்பது நல்லது .ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்திற்கு வந்துவிடும் .அந்த தருணங்களில் நல்ல தரமான கிடாக்களுடன் சேர்த்துவிட வேண்டும் .ஆட்டுக்கு சினை பருவம் ஐந்து மாதம் ,குட்டி போட்ட மூன்று மாதங்களில் மீண்டும் அடுத்த பருவத்திற்கு தயாராகிவிடும் .

எட்டு மாதத்திற்கு ஒரு முறை குட்டி ஈனுவதால் ,சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை  குட்டி ஈனும் ,தாய் ஆட்டிடம் பால் குடிக்கவிட்டு பிரித்துவிட வேண்டும் .அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும் .சோளம்,சீமை புல் ,மக்கா சோளம் போன்றவை ஆடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம் .

No comments:

Post a Comment