கட்டிடம் நமது வாழ்வில் மிக முக்கியமான ஒன்று .பூமி பூஜை தினமும் போடப்படுகிறது .இதற்கான தேவை அதிகரித்து கொண்டே இருக்கும்.செங்கற்களின் தொழில் லாபகரமான முறையில் ஏறுமுகத்தில் தான் உள்ளது .தாமே இந்த தொழிலை செயல்படுத்தி முன்னேறலாம் .
"கொஞ்சம் ஆர்வத்தோடு உள்ளவர்கள் இந்த தொழிலை மேற்கொள்ளலாம் ".இந்தத்தொழில் நாற்பது வருடமாக செய்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜேக்கபிமனோகர் இதை பற்றி கூறியுள்ளார் .
செங்கல் சூளை வைப்பது சிறிது கடினமான தொழிலாகும் .இதற்கு முதலீடு 2 லச்சம் வரை செலவு செய்ய வேண்டும் .சூளை அமைப்பதற்கு சொந்தமாக நிலம் இருக்க வேண்டும் .இவற்றில் எது இருந்தாலும் செங்கல் சூளை அமைப்பதில் பாதி சிரமம் குறைந்து விடும் .
வாடகைக்கு நிலம் பார்த்து சூளை வைப்போர் அதிக வருடத்திற்கு பேசிக்கொண்டு சூளை ஆரமிக்க வேண்டும் .அப்போது தான் இடையில் சூளையை விட வேண்டிய நிலைமை வந்தால்கூட நாம் செலவு நாம் செலவு செய்த பணத்தில் பாதியாவது லாபமாவது கிடைக்கும் .
செங்கலை தயாரிக்கும் முறையை சரியான முறையில் கையாண்டு தயாரிக்க வேண்டும் .
செங்கல் தயாரிக்க தேவையான பொருட்கள் வாங்க வேண்டும் .ஓலை ,மண்வெட்டி.சட்டி ,இரும்பு பெட்டி மற்றும் முக்கியான ஒன்று தேவையான அளவு தண்ணீர் இருப்பதற்கு ஆழ்துளை கிணறு அமைத்து கொள்ள வேண்டும் .இதனை கொண்டு ஆண்டு முழுவதும் உபயோகித்து கொள்ளலாம்."செங்கல் சூளைவேளைக்கு வருபவர்கள் முன்பணம் வாங்கிக்கொண்டே வருவார்கள் .அவர்களை சரியான முறையில் கையாண்டு வேலை செய்வதால் தொழிலில் லாபம் பார்க்கலாம் .
சூளையில் 60 ஆயிரம் செங்கல் வரை தயாரிக்கலாம் .அவற்றிற்கு குறைவாக தயாரித்தால் அனைத்தும் வீணாக போய்விடும் .60ஆயிரம் செங்கற்களை தயாரிப்பது தான் லாபமாகும்
செங்கற்களை உருவாக்க முதலில் மண் மிகவும் அவசியம் அந்த மண் நல்ல தர முள்ளதாக இருக்க வேண்டும்!மேலும் வண்டல் மண்ணும் தேவைப்படும் .ஏனெனில் வண்டல் மண்ணுக்கு தான் இறுக்கி பிடிக்கும் தன்மை உண்டு .
மண்ணை சரியான முறை தண்ணீர் கலந்து பத படுத்தி அதை அடுத்த நாள் மீண்டும் அச்சிலிட்டு உலர வைத்து தயார் செய்ய வேண்டும் .இவ்வாறு செய்தால் ஒரு அச்சில் மூன்று செங்கற்கள் தயார் செய்யலாம் .
வெயில் அதிகமாக இருந்தால் செங்கற்கள் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் அதுவே மழை பெய்தால் நிறைய நஷ்டம் ஏற்படும் .கணக்கில் கொண்டு செங்கற்களை தயாரிக்க வேண்டும் .
சுய வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் கடன் வசதி ,வேலை வாய்ப்பு போன்றவற்றை பெறலாம் .எனவே செங்கல் தயாரிப்பு ஒரு சிறந்த வேலையாக தான் உள்ளது .
No comments:
Post a Comment