Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Tuesday, 12 November 2019

நாட்டுக் கோழி வளர்ப்பு

நாட்டுக் கோழி வளர்ப்பு


நாட்டு கோழி வளர்ப்பது நமது கிராமங்களில் மிக முக்கிய ஒன்றாகும் .நாட்டுக்கோழி வளர்த்து அதனை நல்ல விற்பனை செய்யலாம் .கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் நாட்டு கோழி வளர்க்கப்படும் .இதனை சிரமமின்றி வளர்க்கலாம் .வீட்டில் உள்ள அரிசி குருணை ,கம்பு ஆகியவற்றை மற்றும் புளு ,பூச்சிகள் போன்ற உணவுகளை சாப்பிட்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன .
பெரு ரும்பாலும் பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை செய்வார்கள் ,மற்றும் கோவில் திருவிழாவின் போதும் சேவல் சண்டை செய்வார்கள் .இப்போது அதற்கு தடை செய்யப்பட்டு வருகிறது .சேவல் பலவகையான சேவல்கள் ,பல வண்ணங்களில் பார்ப்பதற்கு அழகா இருக்கும் .ஒரு சிலர் சேவல்களை வளர்த்து அதனை விற்பனை செய்கின்றன .சேவல் சண்டைக்கு அசில் வகை சேவல்களை தேர்வு செய்கின்றன .அதே போல் இன்னொரு இனம் 'சிட்டகாங் 'எனும் நாட்டு சேவல் .இந்த இரண்டையும் கலப்படம் செய்து பெருவாட்டு கோழிகளை உற்பத்தி செய்கின்றன .

அசில் மற்றும் சிட்டகாங் கோழி ஆகிய இரண்டும் இனப்பெருக்கம் செய்து கொள்ளும் .இப்போது சராசரியாக ஒரு நாளைக்கு பத்து முட்டைகளுக்கு மேல் கிடைக்கிறது .இதில் ஊளை முட்டைகள் போக ,எங்களுக்கு மாசம் 200க்கு மேற்பட்ட குஞ்சுகள் கிடைக்கிறது .கறிக்காக நாங்கள் கோழியை விற்பதில்லை .தாய்க்கோழிகளை வளர்ப்புக்காக விற்கப்படுகிறது .சேவல்களை சேவல் கட்டுக்காக வாங்கி செல்வார்கள் .

கோழி குஞ்சுகள் பொரிச்ச முதல் நாளில் குளுக்கோஸ் தண்ணி கொடுக்கப்படும் .பிறகு இரண்டு மற்றும் மூன்றாவது நாளில் மக்காசோளம் மற்றும் கேழ்வரகு கொடுக்கப்படும் .கோழிகள் சாப்பிடும் கழிவுகளை தடுப்பதற்கு முறையான மருந்து கொடுக்க வேண்டும் .அதற்கு பிறகு மாசத்திற்கு ஒரு முறையாவது மருந்து கண்டிப்பாக கொடுக்க வேண்டும் .
குஞ்சுகளுக்கு நல்ல செழிப்பான தீவனங்களை கொடுத்தால் சீக்கிரமாக அதிக எடை கூடும் .50நாட்களுக்கு மேல் வளர்த்துதான் விற்பனை செய்ய வேண்டும்.சேவல்களை அதிகம் சேவல் சண்டைக்காக வாங்கி செல்வார்கள் சேவைகளில் நிறைய வகை உள்ளன .இந்த மாதிரி சேவல்களை அதிக விலைக்கு எடுத்து செல்வார்கள் .நாட்டு கோழிகளை வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் . 
  நாட்டு கோழி இனங்கள் 
➤பெருவிடைக்கோழி 
➤கொண்டைக்கோழி 
➤குட்டைகால்கோழி 
➤சண்டைக்கோழி அசில் கோழி 

நாட்டுக்கோழிகளை மேயவிட்டு தான் வளர்க்க வேண்டும் அடைத்து வைக்க கூடாது அப்படி செய்தால் அது பிராய்லர் கோழி போன்று ஆகிவிடும் .நாட்டுக்கோழிகளை ஆரோக்கியக்கமாகவும் நல்ல தரமாகவும் வளர்க்க வேண்டும் .

நாட்டு கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள் 
நாட்டு கோழிகளை எளிதாக வீடுகளில் வளர்க்கலாம் .வீட்டில் கிடைக்கும் தானியங்கள் மற்றும் காடு மற்றும் தோட்டங்களில் இருக்கும் புழு பூச்சிகள் ஆகியவற்றை சாப்பிட்டு வளரும் .இது கிராமங்களில்இருப்பவர்க்ளுக்கு நல்ல வேலை வாய்ய்பு ஆகும் .இதனுடைய இறைச்சி மற்றும் ருசியான முட்டையின் தேவை அதிகமாக இருக்கும் .நமக்கு அவசர பண தேவையை பூர்த்தி செய்யும் .இது ஒரு நல்ல தொழில் ஆகும் நல்ல லாபம் கிடைக்கும் .


No comments:

Post a Comment