Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Sunday, 24 November 2019

வாஸ்துவும் மரங்களும் ?

வாஸ்துவும் மரங்களும் ?


வீடுகளில் வளர்க்க கூடாத மரங்கள் ?

பருத்தி ,அரசமரம் ,புளிய மரம் ,நாவல் ,நெல்லி ,எருக்கு ,அகத்தி ,பனை மரம் ,ஆலமரம் .
வீடு கட்ட உபயோகிக்க கூடிய மரங்கள் ?

தேக்கு ,வேங்கை ,இலுப்பை ,வேம்பு 
வீட்டில் வளர்க்க கூடிய மரங்கள் ?

வேம்பு ,மாமரம் ,தென்னை ,பவளமல்லி ,பன்நீர்மரம் ,சப்போட்டா ,வாழை ,தேக்கு .

வீடுகட்ட உபயோகிக்க கூடிய மரங்களில் ,கூட அவை வளர்ந்து ஆலயமாக இருந்தாலோ அல்லது மயணமாக இருந்தாலோ ,நெருப்பால் பாதிக்கப்பட்டதாக இருந்தாலோ ,இடி விழுந்து மரமாக இருந்தாலோ நிச்சயம் உபயோகிக்க கூடாது .தற்காலத்தில் இவ்வாறு உபயோகிக்கப்படுத்தும் காரணத்தால் தான் .ஆயினும் முடிந்த வரை நன்கு அறிந்து உபயோகப்படுத்தவும் .
மரங்களின் இனம் 
➤➤ஆண் மரம் கீழ்பாகம் மற்றும் மேல்பாகம் வரை ஒரே சீராக இருக்கும் .
➤➤பெண் மரம் கீழ்பாகம்  பெரியதாகவும் ,நுனிபாகம் சிறியதாகவும் காணப்படும் .
அலிமரம் அடிப்பகுதி பெருத்தும் நடுப்பகுதி குறுகியும் மேல்பகுதி பெருத்தும் காணப்படும் .ஆண் மரங்களை  தூண்கள் ,கால்கள்  அமைக்க உபயோகப்படுத்தலாம் .பெண் மரங்களை உத்திரம் ,குறுக்கு சட்டம் ,பூஜை அறையில் இவ்வித மரசட்டங்களை உபயோகிக்கலாம் .அலிமரங்கள் சாதாரண சட்டங்கள் அமைக்கவும் கிணறுகளுக்கு மேலாகவும் உபயோகப்படுத்தலாம் .

வேப்பமரத்தை உபயோகப்படுத்துவது அரசியல் மற்றும் சமூகத்தில் ஈடுபாடு உடையவர்களுக்கு தொழில் போட்டி உள்ளவர்களுக்கு நன்மை தரும் .இலுப்பை மரத்தை உபயோகிகபடுவது இரசாயனம் மற்றும் மருத்துவத் தொழில்புரிபவர்களுக்கு நன்மை உண்டு செய்யும் .

மாமரத்தை உபயோகப்படுத்தி வீடு கட்டுவது ,வேதம் ஓதுபவர்களுக்கு ,தர்மஸ்தாபனம் நடத்து பவர்களுக்கு நன்மை தரும் .வேங்கை மரம் ,காவல் மற்றும் இராணுவப் பணிபுரிபவர்களுக்கு ஏற்றது .தேக்குமரத்தை பயன்படுத்தி வீடு அமைப்பது எல்லா இனத்தவருக்கும் பொருந்தும் .
விருச்சங்களில் வீட்டில் பன்னிர் மரம் இருப்பதும் பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளை  போக்க கூடியதாகும் .

வீடுகளை சுற்றி இடம் இருந்தால் மரங்கள் அமைவதும் கோடைகளுக்கு ஏற்ற அமைப்பை வீட்டிற்கு ஏற்படுத்தும் பொதுவாக வீடுகளில் தென்னை ,வாழை ,பலா ,மாமரம் ,மாதுளை ,எலுமிச்சை ,வேம்பு  போன்ற மரங்கள் அமைவது நன்மை .

வடகிழக்கில் உயரமான மற்றும் பருத்த மரங்கள் அமைய கூடாது .மரங்கள் வைக்க முடியாத அடுக்கு மாடி வீடுகளில் பால்கனி ,மாடி வீட்டின் காளிமானைப் பகுதி போன்ற இடத்தில் செடிகளை தொட்டிகளில் வைப்பது நன்மை தரும் .

இப்போது வீடுகளில் மரம் வளர்ப்பது குறைந்துள்ளது .வீடு கட்ட பயன்படுத்த கூடாத மரங்கள் ஆலமரம் ,மகிழமரம் ,பூவரசுமரம் ,அரசமரம் ,நாவல்மரம் ,நெல்லிமரம் ,புளியமரம் ,பனைமரம் ,இலந்தைமரம் ,எட்டிமரம் ,போன்றவற்றை கொண்டு தூண் ,உத்திரம் ,கதவு செய்யவும் வீடு கட்டவும் உபயோகிக்கப்படுத்த கூடாது .மேலும் வீடு கட்ட உபகோக்கிக்க கூடிய மரங்களில் கூட அவை வளர்ந்தது ஆலயமாக இருந்தாலோ ,புயலால் உலர்ந்ததாக இருந்தாலோ ,வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக இருந்தாலோ இடி விழுந்த மரமாக இருந்தாலோ ,புயலால் உலர்ந்த்ததாக இருந்தாலோ ,இடி விழுந்த மரமாக இருந்தாலோ நிச்சயம் உபயோகிக்க கூடாது .தற்காலத்தில் இவ்வாறு முழுமையாக அறிய முடிவதில்லை .ஏனென்றால் மரக்கடையில் வாங்கி உபயோகப்படுத்தும் காரணத்தால்தான் .ஆகவே முடிந்தவரை நன்கு அறிந்து உபயோகப்படுத்தவும் . 





No comments:

Post a Comment