தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய குணங்கள் !!!
➤நமது அன்றாட வாழ்க்கையில் நாம் எந்த தொழிலில் இடுபட்டாலும் அதில் உள்ளவர்களுக்கு என தனி மனநிலை இருக்கும் .சாதாரண தொழிலில் துவங்கி பெரிய தொழில் அதிபர் வரை அவர்களுக்கு என ஒரு தனி விஷயங்கள் இருக்கும் அல்லவா .இவ்வாறு உள்ள தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் .அது வெற்றிக்கான அடையாளம் ஆகும் .பிறரிடம் வேலை பார்ப்பவர்களை விட தனியாக தொழில் செய்பவர்களுக்கு என தனி கட்டளைகள் உள்ளது அதனை அவர்கள் தவறாமல் செய்தேய ஆக வேண்டும் .
➤தனியாக தொழில் செய்பவர்கள் தங்களுடைய வேலையை சரிவர கவனித்து வர வேண்டும் அதில் எந்த வேலை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல வேலையை விரைவாக முடிக்க வேண்டும் .தங்களின் வேலையை மறவாமல் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும் .
➤நமக்கு கொடுத்த வேலையை விரைவாகவும் சரியாகவும் முடிக்க வேண்டியது என்பது இன்றய கால கட்டத்தில் முக்கியமான ஒன்றாகும் .நம் செய்யும் வேலையில் தாமதம் ஏற்பட்டால் நமக்கும் வெற்றிக்கும் இடையிலான தூரம் அதிகமாக மாறிவிடும் .நம்முடைய தொழிலுக்கு என்ன என்ன பொருட்களை தேவையோ அதனை நமது அருகில் இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும் .அப்பொழுதுதான் வெற்றி நமக்கு அருகில் இருக்கும் .
➤நாம் தனியாக தொழில் செய்வதால் ஒரு நாளைக்கு எத்தனை விதமான கஸ்டமர்களை சந்திக்க வேண்டிய சூல்நிலை ஏற்படலாம் .அதனால் முடிந்தவரை அலுவலக உடையில் இருப்பது நல்லது .அவ்வாறு இருப்பின் நம்மை பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல மதிப்பு இருக்கும் .
➤நம்மிடம் ஒருவர் ஆர்டர் கொடுக்க வருகிறார்கள் என்றால் அவர்கள் நமது உடையை பார்த்து இவர்கள் நன்றாக கொடுத்த வேலையை முடிப்பார்கள் என்று நம்புவர்கள்கள் .நாம் அணியும் உடைகள் மற்றவர்க்கு நமது மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்த வேண்டும் .நமது அலுவலகம் சம்மந்தமான நிகழ்ச்சிகளில் நாம் கோட் அணிவது இன்னும் நமக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் .நாம் உடுத்தும் உடைக்கு முக்கியதுவம் தருவது நமது தொழில் வளர்ச்சிக்கு நல்ல முன்னேற்றம் ஆகும் .கோட் அணியும் போது அதற்கு என்றாற்போல் மற்ற உடைகளும் அணிவது இன்னும் சிறப்பாக இருக்கும் .
➤நாம் தினமும் சந்திக்கும் அனைத்து நபரும் நம்மை ஞாபகம் வைத்து கொள்ள முடியாது எனவே
➤நமது கடைகளின் விளம்பர கார்டுகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் .நாம் நமது தொழில் களில் பிரபலமானவர்கள் ஆயினும் இந்த கார்டு அவர்கள் நம்மை எளிதில் தொட்ரபுகொள்ள உதவும் .
➤நாம் புதிதாக ஒரு தொழில் செய்கிறோம் என்றால் நமக்கு கண்டிப்பாக எதிரிகளும் போட்டியாளர்களும் இருப்பது எளிமையான ஒன்றாகும் .நாம் அதற்கு மாறாக அவர்களை எவ்வாறு வெல்வது என திட்டமிட்டு தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் .நமது நிறுவனத்தில் எவை பின்தள்ளி உள்ளது என கண்டறிந்து அதற்கு ஏற்றதுபோல பயனுள்ள புதிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் .
➤நாம் உருவாக்கும் தொழில்களில் பல சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்ற திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் .
நமது நிறுவனத்தின் பெயர் தெரியும் வகையில் நமது வேலையை செய்வது மிகவும் அவசியம் ஆகும் .
➤புதிதாக தொழில் மேற்கொள்பவரும் சரி ,பெரிய நிறுவனத்திற்கு மேனேஜர் ஆக இருந்தாலும் சரி தொழிலில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படுவது மிகவும் எளிமையான ஒன்று .அந்த நஷ்டத்தை பார்த்து நாம் சோர்ந்து விட கூடாது .நமக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்தை எவ்வாறு சரி செய்யலாம் என சிந்தனை செய்ய வேண்டும் .நமது நிறுவனத்தில் வேலை செய்பவர்களிடம்
நமது நிறுவனத்தின் நஷ்டத்தை அவர்களிடம் சொல்ல வேண்டும் அப்பொழுதுதான் அவர்களும் நமக்கு செய்யும் வேலையில் முழுமனதாக ஈடுபடுவர் .நிறுவனம் நஷ்டமான நிலையில் உள்ளது என பொருள்களின் தரம் மற்றும் விலையை அதிக படுத்த கூடாது .எத்தனை நஷ்டங்கள் இருந்தாலும் பொருள்கள் தரத்தை மட்டும் குறைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் .
அப்பொழுதுதான் நமக்கு நஷ்டங்கள் ஏற்பட்டாலும் மறுபடியும் வெற்றி பெற வழி வகுக்கும் ➤ ஏதோ தொழில் செய்கிறோம் தற்போது வருமான வருகிறது என்ற நினைவில் இருக்க கூடாது நாம் செய்யும் தொழில் பற்றிய சிந்தனை அடுத்த ஒரு வருடம் கழித்து நமது நிறுவனம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும் .
இன்னும் சிறிது காலம் சென்ற பிறகு நமது தொழில் வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற எதிர்கால சிந்தனையுடன் செயல் பட வேண்டும் .நமது நிறுவனம் இந்த நிலையில் இருக்க வேண்டும் என வழிவகுத்து அதற்கு ஏற்றது போல நிறுவனத்தை நடத்தி வர வேண்டும் .
➤நமது நிறுவனம் பற்றிய கருத்துக்கள் மற்றும் முடிவுகளை நாமே நன்றாக யூகித்து பிறகு முடிவு செய்ய வேண்டும் .நமது நண்பர்கள் சொல்வதையோ அல்லது உறவினர் சொல்வதையோ கேட்டு முடிவு எடுப்பதை முடிந்தவரை குறைக்க வேண்டும் .நாமே சொந்த முயற்சியில் ஈடுபட்டால்தான் நமக்கும் வெற்றிக்கும் இடையில் உள்ள தூரம் குறையும் .
No comments:
Post a Comment