சுவையான சாப்பாடு... அதிகமான லாபம்
நம் சாலைகளில் பார்த்தால் அதிகமாக உணவு எடுத்து செல்லும் கேட்டரிங் வண்டிகள் தான் செல்கின்றன பெரிய நகரங்களில் வீட்டிற்கே கொண்டு போய் கொடுக்கும் உணவு பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது .இதனை சுத்தமாகவும் ,சுவையாகவும் கொடுத்தால் அனைவரும் வாங்கி சாப்பிடுவார்கள் .
வேலைபார்ப்பவர்கள் மற்றும் ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் என அனைவருக்கும் நல்ல சாப்பாடு தேவை படுகிறது .அதை பூர்த்தி செய்வது நல்ல தொழில் ஆகும் .சமையல் தொழில் என்பது கண்டிப்பாக லாபம் தரக்கூடிய தொழில் ஆகும் .வீட்டிற்கே தேடி போய் உணவை வழங்குவதை தான் அனைவரும் விரும்புகிறார்கள் .
இந்த தொழிலை செய்வதற்கு பெரிய ஹோட்டல் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை .வீட்டில் இருந்தே சமைத்து தொழில் செய்யலாம் .இதற்கு தேவை நன்கு சமைக்க தெரிந்தால் போதும் .அனைவரும் விரும்பி வருவார்கள் .
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ?அருகில் எந்த மாறியன அலுவலகங்கள் மற்றும் இளைனர்கள் விடுதி இருக்கிறதா என அறிந்து கொண்டு கேட்டரிங் சர்வீஸ் பற்றி நோட்டிஸ் அடித்து கொடுக்க வேண்டும் .அப்போது அனைவரும் வருவார்கள் .
அப்படி நோட்டிஸ் கொடுத்தால் எத்தனை பேர் சாப்பாடு வாங்க தயராக இருக்கிறார்கள் .எந்த மாதிரியான உணவு தேவைப்படும் என்ற விவரங்கள் தெரிந்து விடும் .
பொதுவாக இருபது க்கு மேற்பட்ட ஆட்களுக்கு தேவையானா ஆர்டரை பிடிப்பது மகவும் நல்லதாகும் .அப்போதுதான் நமக்கு கொஞ்சமாவது லாபம் கிடைக்கும் .தரமான அரிசி ,மற்றும் மசாலாப்பொருட்கள் வாங்கி சமைக்க வேண்டும் .உணவு தொழிலை பொறுத்தவரை எந்த அளவுக்கு லாபம் இருக்கிறதோ அந்த அளவுக்கு கஷ்டமும் இருக்கும் .அதனால் நல்ல தரமாக சமைக்க வேண்டும் .
மதிய உணவு என்றாலே பொதுவாக சாதம் ,ரசம் ,மோர் ,பொரியல் இவைகள் தான் அதிகம் கொடுப்பார்கள் .இதுபோக காரகொளம்பு ,தயிர் இவைகள் தான் மதியம் அதிகமாக சாப்பிடுவார்கள் .தொழில் பெரிய அளவில் வரும்பொழுது உதவிக்கு தேவையான ஆட்களை சேர்த்து தேவையான பாத்திரங்களை வாங்கி அதிகமாக சமைக்கலாம்
தொழில் சூடுபிடிக்கும்போது அலுவலகங்கள் மற்றும் விடுதி இருக்கும் விடுதியில் அமைத்து வியாபாரம் செய்யலாம் .முதலில் இருப்பதாயிரத்துக்கு மேல் தேவைப்படும் .அப்போது தான் தின வருமான செலவை சமாளிக்கலாம் .இதில் கடன் அவசியம் இருக்க கூடாது .மேலும் விழாக்கள் ,விசேஷம் ,என தொழிலை பெரிதாக்கலாம் .
தொழில் சூடுபிடிக்கும்போது அலுவலகங்கள் மற்றும் விடுதி இருக்கும் விடுதியில் அமைத்து வியாபாரம் செய்யலாம் .முதலில் இருப்பதாயிரத்துக்கு மேல் தேவைப்படும் .அப்போது தான் தின வருமான செலவை சமாளிக்கலாம் .இதில் கடன் அவசியம் இருக்க கூடாது .மேலும் விழாக்கள் ,விசேஷம் ,என தொழிலை பெரிதாக்கலாம் .
No comments:
Post a Comment