Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Friday, 22 November 2019

முயல் வளர்ப்பு ??




முயல் வளர்ப்பது எப்படி ?

முயல் வளர்ப்பு என்பது மிகவும் நல்ல தொழில் ஆகும் .முயல்கள் பார்ப்பதற்கும் மிக அழகா இருக்கும் .மிக சுலபமாக முயல்களை வளர்க்கலாம் .இவற்றின் ஆயுட்காலம் 12வருடங்கள் .சாம்பல் ஜெயிண்ட் ,சோவியத் சின்சிலா ,ஆகிய வெள்ளை ரகங்கள் வளர்ப்புக்கு ஏற்றவை .இவை இரண்டு மாதத்திலே 3கிலோ க்கு மேலாக எடை அதிகரிக்கும் .


பணம் செலவு பண்ணாமல் வீட்டுக்கு அருகில் உள்ள இடங்களிலே கூண்டுகளை முயல் வளர்க்கலாம் .ஒரு முயலுக்கு சராசரியாக நான்கடி இடம் தேவை .கூண்டு இரண்டு அடிக்கு இரண்டாக இருக்க வேண்டும் .இது வளரும் முயலுக்கு போதுமானது .குட்டிகள் போடும் முயல்களுக்கு இரண்டு அடி சதுரத்தில் ,ஒரு அடி உயரத்தில் அமைத்தால் போதும் .கூண்டுகளுக்கு 14 கேஜ் கம்பிகளை பயன்படுத்தினால் முயலுக்கு காலில் புண் ஏற்படாது .வீட்டுக்கு அருகில் அமைத்தாலே பணம் செலவு இல்லாமல் வளர்க்கலாம் .அருகிலே தண்ணீர் நிப் அமைத்து விட்டால் தண்ணீர் வீணாகாது .


முயல்கள் பருபவத்திற்கு வரும்போது முயலின் பிறப்பு உறுப்பில் தடித்து சிவப்பாக இருக்கும் இதை வைத்து பருவத்திற்கு வந்துவிட்டதா என்பதை கண்டறியலாம் .ஆண் முயல் இருக்கும் கூண்டில் பருவம் அடைந்த பெண் முயல் விட வேண்டும் .பிறகு பெண்முயலை அதனின் கூண்டிற்குள் விட வேண்டும் .இன்சேர்க்கை ஆகும் முயல்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்ததாக இருக்க கூடாது .அப்படி சேர்ந்தால் எதாவது குறைபாடு நடந்துவிடும் .பிறகு 15நாட்களுக்கு மேல் கழித்து முயலின் வயிற்றை தடவி பார்த்தால் குட்டி இருப்பது தெரியும் .உடனே சினை முயல்கள் இருக்கும் கூண்டிற்கு மாற்றி விட வேண்டும் .

முயல்கள் குட்டி போடும் போது நார் கழிவுகளை அமைத்து ஒரு தனி கூண்டில் வைக்க வேண்டும் .வருடத்திற்கு 8குட்டிகள் வரை போடும் .30நாட்கள் முயல்களின் சினை காலம் .முதல் பருவத்தில் குறைந்தது மூன்று குட்டிகள் வரை போடும் .குட்டிகளின் எடை 5அல்லது 6கிரமாக இருக்கும் .ஒரு மாதம் குட்டிகளுக்கு தாய் பால் குடுக்க வேண்டும் .பிறகு அதனை தனியாக பிரித்து வேற கூண்டில் வைக்க வேண்டும் .தீவனம் தொடர்ந்து கொடுத்து கொண்டே வந்தால் அதிக இடை வரும் .முயல்களுக்கு அகத்தி ,மல்பெரி இலைகள் ,தட்டைசோளம் ,ஆகியவற்றை கொடுக்கலாம் இவைகள் கடைகளில் நல்ல தரமாக இருக்காது அதனால் நம்மாலே எளிமையாக தயாரிக்கலாம் .முயல்களுக்கு அடர் தீவனம் மற்றும் பசுந்திவனம் இரண்டையும் கொடுக்கலாம் .குட்டி ஈன்ற முயல்களுக்கு கொஞ்சம் குறைவாக குடுக்க வேண்டும் .முயல்கள் பகல்ளில் அதிகம் தூங்கும் ,அதனால் காலை நேரங்களில் கம்மியாகவும் இரவு  நேரங்களில் அதிகமாவும் கொடுக்க வேண்டும் . 

No comments:

Post a Comment