Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Wednesday, 20 November 2019

ஏற்றுமதி இறக்குமதி செய்வது எப்படி .....???


ஏற்றுமதி என்பது உள்ளூரில் தயாரிக்கும்  பொருட்களை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்வதாகும் .பொருளின் தரம் அதிகமாக இருந்தால் வெளி நாடுகளுக்கு அதிக விலையில் விற்பனை செய்யலாம் .அதில்  அதிக லாபத்தை பார்க்கலாம் .

நாம் நமது சரக்குகளை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்ய முதலில் அரசாங்கத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் .அவர்களிடம் பதிவு செய்து விட்டு தான்  ஏற்றுமதி பொருட்களை  வெளி நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் .அதேபோல் இறக்குமதிக்கான குறியீட்டை பெற்றிருக்க வேண்டும் .இதற்கென்று தனி ஒரு கூட்டமைப்பு இருக்கிறது அவர்கள் தங்களின் நிறுவனங்களை நடத்தி வருகின்றன .

ஏற்றுமதி செய்யும் முறைகள் :

தயாரிக்கும்  பொருட்களை  உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதை விட வெளி நாடுகளில் விற்பனை செய்தால்  அதிக படியான  லாபம் பெற்று வாழ்வில் முன்னேறலாம் . 
தயாரிக்கும் பொருட்களை முழுகவனத்துடன் தயாரிக்க வேண்டும் அதில் ஒரு குறை இருந்தாலும்  கூட ஆர்டர் திருப்பி செய்து அனுப்பி தரப்படும் .பொருளின் தரம் குறையாமல் குறைந்த  நாட்களிலேயே கெட்டுப் போகாத அளவிற்கு தயாரிக்க வேண்டும் .நீங்கள் அனுப்பும் பேக்கேஜ் எந்த ஒரு தரமும் குறையாமல் செல்ல வேண்டும் ஏற்றுமதி செய்யும் போது நிறைய வழி  முறைகள் உள்ளன .
முதலில் அனுப்பும் பொருள் நிறுவனத்தாளர்களுக்கு திருப்தி தர கூடியதாக இருக்க வேண்டும் .மேலும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்பவர்களை திருப்தி படுத்த வேண்டும் .இது போக மேலும் அதிகமாக எங்களால் ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் .ஆரம்பத்தில் நல்ல தரமானதாக ஏற்றுமதி செய்தல் தான் நிறைய ஆடர்கள் வரும் .அதை தொடர்ந்து நிறைய தொழில் நாமும் ஈடுபடலாம் .ஏற்றுமதி செய்யும் போது சரியான  நேரத்தில்  செய்தால்  தான்  நிறுவனத்தாளர்களை திருப்தி படுத்த முடியும் .

 ஏற்றுமதி செய்யும் போது கவனிக்க வேண்டியவை :

➤நாம் எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய போகிறமோ அங்கு நிலவரம் எப்படி இருக்கிறது எவ்வாறு  விற்பனை செய்வது  அந்த மார்க்கெட்டில் விலைகள் எப்படி விற்க்க  படுகிறது என்பது முதலானதை அறிந்திருக்க வேண்டும் . 
➤நாம் பொருட்களை வாங்கும் போது சரியான இடத்தில வாங்க வேண்டும் .ஒரே இடத்தில் வாங்கினால் தான் நமக்கும் விலை குறைத்து தரப்படுவார்கள்,தரமும் குறையாமல் ஒரே மாதிரியாக இருக்கும் .
➤நாம் அனுப்பும் பொருள் பேக்கேஜ் சரியான முறை செய்ய வேண்டும் .ஏனெனில் நாம் அனுப்பும் பொருள்  தொலை  தூரம் செய்வதால்  எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் அப்டியே சேர வேண்டும் .அதற்க்கு பேக்கேஜ் நன்கு செய்ய பட வேண்டும் .பொருட்கள் தட்பவெட்ப நிலையால் பாதிப்படையாதபடி பேக்கிங் செய்வது அவசியம்.
➤ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு இன்சூரன்ஸ் பெற வேண்டும் .ஏனெனில் நாம் அனுப்பும் பொருள் போய்  சேர வில்லை என்றால் அதற்க்கான தொகை திரும்ப வழங்க படும் .
➤இதற்குவிதி முறைகள் உள்ளன .அவற்றை கடைபிடிக்க வேண்டும் .வேறு வேறு நாடுகளுக்கு விதி முறைகள் மாற்ற படும் .அவற்றிற்கு கட்டுப்பட்டு தான் ஏற்றுமதி செய்ய படும் .அதற்கு அந்த நாடு சான்றிதழ் வழங்கப்படும் .அதை பெறுவது மிகவும் அவசியம் .
ஏற்றுமதி செய்வதன் மூலம் உலகில் எங்கெங்கு என்னன்னா  தேவை படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும் .அதற்கு ஏற்றவாறு ஏற்றுமதி செய்ய முடியும். 
ஏற்றுமதி செய்தப்பின் பாதுகாப்பான முறையில் பணத்தை பெறுவதற்கான வசதியும் ,அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பான முறையில் பணத்தை பெறவும் ஏற்பாடு செய்யப்படுகிறது .

No comments:

Post a Comment