Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Wednesday, 20 November 2019

மண் புழு உரம்


மண் புழு உரம் தயாரிப்பது எப்படி ???
⏩இன்றய காலகட்டத்தில் இளைஞனர்கள் இயற்கை நியதிகளை மதிப்பது இல்லை அது மட்டும் அல்லாது இயற்கையை பற்றி நினைப்பதும் இல்லை .நமது வாழ்வில் அதிகப்படியான நோய்கள் வருவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் நாம் இரசாயனம் கலந்து விளைவிக்கப்படும் உணவு பொருள்களை வாங்கி உண்பதுதான் .தற்போதைய சூழ்நிலையில் செயற்கை இரசாயன பொருள்களை நாம் அதிக அளவில் உட்கொண்டு வருகின்றோம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும் .
⏩இருப்பினும் மக்கள் இந்த செயற்கைஉரத்தினால் உண்டாகும்  உணவில் வரும் தீமைகளை அறிந்து தற்போது  அனைவரும் விழிப்புணர்வு அடைந்து உள்ளனர் .அந்த விழிப்புணர்வு என்னவென்றால் இனி இயற்கை உரம் பயன்படுத்தி உருவாக்கும் காய்கறிகளை வாங்குவது .இந்த இயற்கை உரம் என்பது பல்வேறு வகையில் உள்ளது .அதில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் இந்த மண் புழு உரம் ஆகும் இந்த மண்புழு என்றும் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படும் .மண்புழு உரம் பயன்படுத்துவதால் அவை மண்ணிற்கு நல்ல சக்தி தருவதோடு நமது உணவு பொருள்களுக்கு நல்ல நோய் எதிர்ப்பை தரும் இந்த மண்புழு உரம் நமது வீட்டில் தேவையற்ற காய்கறி கழிவுகள் ,பழங்கள் மற்றும் மக்கும் குப்பைகளை கொண்டு தயார் செய்ய படுகிறது .இந்த மண்புழு உரம் தயாரித்தல் தொழில் என்பது நல்ல வருமானம் தரும் தொழில் இதில் அனைவரும் இறங்கி நல்ல லாபம் பார்க்கலாம் .
⏩இந்த மண்புழு உரம் நிலத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது .அதனால் அனைவரும் இந்த உரம் தயார் செய்யலாம் .நாம் `உரம் தயார் செய்ய அதற்காக கொடுக்கப்பட்ட வழிமுறையில் கையாள வேண்டும் .
⏩இந்த மண்புழு உரம் அனைத்து வகையான விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்தலாம் தரிசு நிலம் நன்சை மற்றும் புன்செய் ஆகிய நிலங்களுக்கும் பயன்படுத்தலாம் .விவசாயம் மட்டும் அல்லாது நமது வீட்டில் வளர்க்கும் பூந்தோட்டம் ஆகியவைகளுக்கு இந்த மண்புழு உரம் நல்ல பயனுள்ளதாக இருக்கும்  .இந்த மண்புழு உரம் பயன்படுத்துவதால் விவசாயம் நல்ல மகசூல் தருகிறது என்று உரம் உபயோகித்த மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .விவசாயம் மட்டும் அல்லாது மற்ற தொழில்களிலும் இந்த மண்புழு பயன்[படுகிறது .அதாவது கோழி வளர்ப்பு ,மீன் குஞ்சி வளர்ப்பு ஆகிய தொழில்களில் இது பயன்படுகிறது .அதிக விலை உயர்ந்த மீன்களுக்கு உணவாக இந்த மண்புழுக்கள் பெரும் அளவில் பயன்படுகிறது .பல்வேறு நாடுகளில் இந்த மண்புழு உரம் பயன்படுத்தி நல்ல பயன் ஏற்பட்டு உள்ளதா தகவல் வந்து உள்ளது .இயற்கை உரம் என்பதால் நல்ல அதிகப்படியான விளைச்சல் தருகிறது .
அதுமட்டும் அல்லாது நல்ல நோய் எதிர்ப்பு சக்தியாகவும் உள்ளது .
இட வசதி :
⏩இந்த மண்புழு உரம் தயாரிக்க நமக்கு குறைந்தபட்சம் 700 சதுர அடிதாராளமான பரப்பளவில் தயாரிக்கலாம் . நிலம்  தேவைப்படும் .நமது சொந்த நிலத்தில் இந்த மண்புழு உரம் தயார் செய்கிறோம் என்றால் அதனை தாராளமான பரப்பளவில் தயாரிக்கலாம் .கிராமத்தில் உரம் தயார் செய்பவர்கள் நல்ல அதிகப்படியான உரங்களை தரமானதாக தயாரிக்கலாம் .மொட்டை மாடி வைத்து இருப்பவர்கள் இந்த உரம் தயாரிப்பை அந்த மொட்டை மாடி சுவர்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் படி பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தி இந்த மண்புழு உரம் தயாரிக்கலாம் .
தேவைப்படும் பொருள் :
⏩மாட்டு சாணம்
⏩காய்கறி மற்றும் பழங்களின் கழிவு
⏩வீட்டில் இருக்கும் கழிவு
⏩தாவர கழிவு
"மக்கும் தன்மை" உள்ள அனைத்து பொருள்களையும் பயன்படுத்தி இந்த மண்புழு உரம் தயாரிக்கலாம் .தயாரிக்கும் முறை :
⏩மண்புழு உரம் என்பது முற்றிலும் இயற்கை பொருள்களால் உருவாக்கப்படும் உரம் .இதனை உருவாக்க இயற்கை தாவர கழிவுகளை பயன்படுத்தலாம் .இந்த தாவர இலைகளை மண்ணில் போட்டுவிட வேண்டும் பிறகு அதன் மேல் மாட்டு சாணத்தை கரைத்து தொழித்து ஈரப்பதமாக வைத்து கொள்ள வேண்டும் .இவ்வாறு செய்து வர ஒரு மாதத்தில் குப்பை நன்றாக மக்கிப்போய் விடும் இவ்வாறு குப்பை மக்கிய பிறகு ,மேற்கொண்டு அதன் மேல் நீர் உற்ற வேண்டும் .இவ்வாறு செய்து வர 30-50 நாட்களின் மண்புழு உரம் தயாராகிவிடும் .
⏩மண்புழுக்கள் உருவாவதை பார்த்த பிறகு இதனை தனித்தனியாக எடுத்து விற்பனை செய்யலாம் அதாவது மண்புழுக்களை தையாகவும் மற்றும் அதன் உரத்தை தனியாகவும் எடுத்து விற்பனை செய்யலாம் .
தொழிலாளிகள் :
⏩இந்த மண்புழு உரம் தயாரிக்க தனிப்பட்ட முறையில் ஆட்கள் தேவைப்பட்டது .விவசாயம் செய்யும் விவசாயிகள் இருந்தால் போதுமானது .அதுவும் கிராமத்தில் இந்த உரம் தயாரிக்க ஆட்கள் எளிமையாக கிடைத்து விடுவார்கள் .ஒரு வருடத்திற்கு 300 மெட்ரிக் டன் உரம் தயாரிக்கலாம் இதற்கு குறைந்த பட்சம் ஐந்து முதல் பத்து ஆட்கள் மட்டுமே தேவைப்படும் .

⏩இயற்கை உரங்களை வாங்க அதிகபடியான ஆர்வலர்கள் இருந்தாலும் அதனை தயாரிக்க எவரும் முன்வருவது இல்லை .இதன் தயாரிப்பு மிகவும் குறைவானதாகவே உள்ளது .நகர புறத்தில் உள்ள மக்கள் இந்த தொழில் செய்வதை காட்டிலும் கிராமங்களில் உள்ள மக்கள் இந்த தொழில் மேற்கொண்டால் நல்ல வருமானம் கிடைக்கும் .கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டே இந்த மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபடலாம் .இந்த இரண்டு தொழிலும் சேர்ந்து விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் .இந்த மண்புழு உரம் தயார் செய்ய போதிய வெப்ப நிலை மட்டும் இருந்தால் போதுமானது .பெருமளவில் நிழல்கள் மட்டுமே தேவைப்படும் .
⏩புதிதாக வருமானம் செய்ய நினைப்பவர்கள் இந்த மண்புழு உரம் தயார் செய்யலாம் .குறைந்த முதலீடு மட்டுமே தேவைப்படும் .ஒரு கிலோ மண்புழுவின் விலை தற்போது  400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது .மற்றும் மண்புழு உரம் கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்ய படுகின்றது .








No comments:

Post a Comment