கால் டாக்ஸி தொழிலில் முன்னேறுவது எப்படி ..?
இந்த கலை வண்ண உலகில் எத்தனை வகையான வண்ணங்கள் இருக்கின்றன .அதிலும் வெளி நாடுகளில் சொல்ல முடியாத அளவிற்கு வண்ணங்கள் உள்ளன .வாகனங்களில் வண்ணங்களை தீட்டி கொண்டு வெளி நாடுகளில் சாலைகளை அலங்கரித்து கொண்டிருக்கின்றன .
கார்களில் பயணம் செய்ய அனைவரும் விரும்புகின்றன .நெனைத்தவுடன் பயணம் செய்ய கால் டேஸ்சி மட்டுமே சரியானதாக இருக்கும் .எனவே கால் டேஸ்சி தொழில் ஒரு சிறந்த தொழிலாகவும் பணத்தை அள்ளித்தர கூடியதாகவும் உள்ளது .
கார் ஓட்ட தெரிந்தால் நாமே சொந்தமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் .தனியாக ஒருவரை வாடகைக்கு வைத்து சம்பளம் கொடுக்க தேவையில்லை .வரும் வருமானம் அனைத்தும் நம்முடையது .நீங்களே சொந்தமாக கால் டேஸ்சி ஓட்டினால் மாதம் 17000 முதல் சம்பாதிக்கலாம் .
புதியதாக கார் வாங்கும் போது முதல் இரண்டு மாதங்களுக்கு அதிக வாடைகையுடன் கார் ஓட்டப்படுகிறது .புதிய கார்களில் அதிகம் ரிப்பேர் செலவுகள் வர வாய்ப்புகள் இல்லை .முதலீட்டில் காரின் ஒரு பங்கை பெற்று கொள்ளலாம் .வாடகை ,அட்வான்ஸ் போன்ற எந்த ஒரு தேவையும் இல்லை .
கால் டேஸ்சி ஓட்ட செகண்ட்ஹேண்ட் கார்களையும் வாங்கி ஓடலாம் .இதற்க்கு அதிக செலவு இருக்காது .கார் எப்போதும் சுத்தமாக பளிச்சென்று வைத்திருக்க வேண்டும் .
வருடங்கள் தவறாமல் கார்களுக்கு இன்சூரன்ஸ் கட்டிவிட வேண்டும் .புதியதாக வாங்கும் கார்களுக்கு வருடங்கள் செல்ல செல்ல இன்சூரன்ஸ் குறைந்து கொண்டே இருக்கும் .வேண்டிக்கு தேவையான அனைத்து ரசீதுகளும் வைத்து இருக்க வேண்டும் .மற்றும் சாலை வரிகளையும் செலுத்தி விட வேண்டும் .
நீங்கள் கால் டேஸ்சி வைத்திருப்பது உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள் என்று அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் .அப்போது தான் தேவைக்கும் கால் டேஸ்சியை வாடகைக்கு அழைப்பார்கள் .நீங்கள் கார் வைத்திருப்பதை முதலில் விளம்பரம் செய்ய வேண்டும் .விசிட்டிங் கார்டு தயார் செய்து அனைவர்க்கும் கொடுத்து விளம்பரம் செய்ய வேண்டும் .
நமது கார் வாடகைக்கு செல்ல அனுபவமுள்ள வாடிக்கையாளர்களை கொண்டு கார்களை ஓட்டவேண்டும் .வளர்ந்து வந்தவர்களுக்கு கார் வாடகை நிறைய கிடைக்கும் .முதலில் ஓட்டுபவர்களுக்கு அவ்வாறு இருக்காது .கிடைக்கும் ஒவ்வொரு வாடகையும் லட்டு மாதிரி பயன்படுத்தி கொள்ள வேண்டும் .மேலும் நமக்கு வாடகை பிடித்து தரும் நபருக்கு வாடகை தர வேண்டும் .கிலோ மீட்டருக்கு ஒரு தொகையென ஓட்டி வர வேண்டும் .
பெருநகரங்களில் கார்களின் தேவைகள் சற்று அதிகமாவே இருக்கும் .மத்திய ,மாநில அரசுகளில் இருக்கும் உயர்ந்த பதவியாளர்களுக்கு கால் டேஸ்சின் தேவை சற்று அதிகமாக இருக்கும் . பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லவும் ,திருமண நாட்கள் ,மற்றும் இரத நாட்களில் கார்களின் தேவை நிறையவே இருக்கும் .பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருந்தாலும் கால் டேஸ்சி ஓட்டுநராக இருப்பது ஒரு சிறந்த தொழிலாக உள்ளது .சீசன் சமயங்களில் கார் வாடகைக்கு நிறைய காணப்படும் .அந்த மாதிரியான நேரங்களில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்து கொண்டால் நீங்கள் தான் காரின் முதலாளியாக காணப்படுவீர்கள் .
கால் டெக்ஸிகளுக்கு வருமானம் தர கூடிய நாட்கள் :
கால் டெக்ஸிகளுக்கு வருமானம் தர கூடிய நாட்கள் :
கோடைகாலங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தவுடன் அனைவரும் சுற்றுலா செல்ல கார்களை தேடி வருவார்கள் .அப்போது வாடகைக்கு தேடி வருபவர்களை விட்டு விடாமல் வருமானத்தை தேடி கொள்ள வேண்டும் .மேலும் கார்த்திகை மாதம் சபரி மலைக்கு செல்ல இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் .அப்போது நல்ல வருமானம் கிட்டும் .சீசன் சமயங்களில் குற்றாலம் .ஊட்டி,ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் .
கார்களில் ஏற்படும் ரிப்பேர்களை சரி செய்ய தேவையான பொருட்களை வாகனங்களிலேயே வைத்து கொள்ள வேண்டும் .நீண்ட தூரம் பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை நமே சரி செய்து கொள்ளுமாறு ஏற்படுத்தி கொள்ள வேண்டும் .
சவாரி செய்து விட்டு வாடிக்கையாளர்கள் பணம் தராமல் இழுத்தடிக்கலாம் .அதற்கு தயாராக இருக்க வேண்டும் .வாகனங்களை அடிக்கடி சர்விஸ் விட வேண்டும் .அதேபோல் நேரங்களிலும் வாடகை இயக்கும் என்று நினைக்க கூடாது .சில சமயங்களில் வருமானம் இல்லாமலும் போகலாம் .நாம் வருமானத்தை விட காருக்கு செய்யும் செலவு அதிகமாக கூட இருக்கலாம் .இதில் லாபமும் உண்டு நஷ்டமும் உண்டு .
வாகனங்களுக்கு செய்யும் செலவு போக ஒரு பங்கு தொகையை நமது கைகளில் இருக்கும் படி சம்பாதிக்கலாம் .நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் என்று வைத்தால் கூட மாதம் 15000 இருக்கும் படி வைத்து கொள்ளலாம் .
நாம் இருக்கும் இடத்தை பொறுத்து வாடகை அதிகமாக கிடைத்தால் சொந்தமாக கார் வாங்கி ட்ராவல்ஸ் நடத்தலாம் .
"தினமும் என்னை கவனி "என்ற வாசகத்திற்கு ஏற்ப சரியான முறையில் நடத்தி வந்தால் நீங்களும் பெரிய முதலாளியாக வலம் வரலாம் !!
No comments:
Post a Comment