சில நூறு ரூபாய் மதிப்புள்ள அழகு பொருள்கள்தான் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நமது வீட்டிற்கு அதிகப்படியான அழகு சேர்க்கும் .தற்போதய சூழ்நிலையில் ஓவ்வொரு வீட்டிலும் வரவேற்பு அறையில் ஒரு நிலையான இடத்தை பிடித்து தவிர்க்க முடியாத ஒன்றாக இந்த அலங்கார பொருள்கள் மாறிவிட்டது .இந்த அலங்கார பொருள் தயாரிப்பு என்பது மிகவும் சிறந்த தொழிலாக கருதப்படுகிறது .
இந்த அலங்கார தொழில் செய்ய அதிக முதலீடு தேவை இல்லை .குறைந்த பணம் இருந்தால் மட்டுமே போதுமானது .இதற்கு தனித்திறமை என எதுவும் தேவை இல்லை பொருள்களை எவ்வாறு வடிவமைக்கலாம் என்ற சிந்தனை இருந்தால் போதுமானது .பெண்களுக்கு இந்த வேலை எளிமையா இருப்பதால் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே இந்த தொழிலில் ஈடுபடலாம் . இந்த தொழில் செய்ய நமது வீட்டின் ஒரு பகுதியே போதுமானது .
இந்த தொழில் மிகவும் எளிமையாக இருப்பதால் வீட்டில் உள்ள பெண்கள் தயாரித்து அதனை ஆண்கள் விற்பனைக்கு எடுத்து செல்லலாம் .நமக்கு அதிக வருமான கிடைக்கும் .
இந்த அலங்கார பொருள்கள் தயாரிக்க தேவையான பொருள்கள் வெல்வெட் ,பல வண்ணம் கொண்ட துணிகள் ,குண்டுமணிகள் ,கலர் பேப்பர் ,பசை ,நூல் ,கத்தரிக்கோல் மற்றும் திடமான பேப்பர் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது .இந்த பொருள்கள் கொண்டு நாம் அழகான பொருள்கள் தயாரித்து கொள்ளலாம் .மேல் குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தும் எளிமையான முறையில் நமக்கு கடைகளில் கிடைக்கும் .தென்னை ஓலை போன்ற இயற்கை முறையில் தயாரித்தல் அலங்கார பொருள்களுக்கு நல்ல வரவேற்பும் வருமானமும் கிடைக்கும் .
அழகு பொருள்கள் என்றால் வீட்டிற்கு உள்ளே மட்டும் பயன்படுத்துவது இல்லை வீட்டிற்கு வெளியில் பயன்படுத்தும் கால் மிதியும் பல வண்ணங்களில் அழகாக உருவாக்கலாம் .தற்போதைய சூழ்நிலையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது .
நாம் ஒரு பொருளை எவ்வளவு அழகாக தயார் செய்கிறோம் என்பதை பொறுத்து நாம் வாடிக்கையாளரிடம் விலை நிர்ணயம் செய்யலாம் .நாம் தயாரிக்கும் பொருள் மற்றவர்களின் கண்களை கவரும் வகையில் அமைய வேண்டும் .நமது வீட்டை மட்டும் அலங்காரம் செய்து கொள்வதோடு மற்றவர்களுக்கு நினைவு பரிசாக தரலாம் மற்றும் திருமண பரிசாக இந்த அலங்கார பொருளை தரலாம் . கைவினை பொருள்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது .இந்த அலங்கார பொருள்களின் விலை ரூபாய் 10முதல் 1000 வரை பொருள்களின் வடிவமைப்பை பொறுத்து அமையும் .
.இதற்கு பணம் மிகவும் குறைவாகவே தேவைபடும் .பொருள்கள் தயாரிப்பது என்பது நமது திறமைக்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும் .சிறிய பொம்மைகள் முதல் அனைத்து பொருள்களையும் நல்ல கலை நயத்துடன் வடிவமைக்க வேண்டும் .சிறப்பு வாய்ந்த பொருள்கள் தயாரித்தல் நமக்கு அதிக வருமானம் கிடைக்கும் .இந்த பொருள்களின் விலை நிர்ணயம் அவற்றின் வடிவத்திற்கு ஏற்ற வகையில் அமையும் .
இந்த அலங்கார பொருள்களை விற்பனை செய்ய நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம் அல்லது உங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் கிப்ட் ஷாப் ஆகியவற்றில் இந்த பொருள்களை விற்பனை செய்யலாம் .மற்றும் நீங்களே நேரடியாக வாடிக்கையாளரிடம் விற்பனை செய்யலாம் .
இந்த அலங்கார பொருள்களை விற்பனை செய்ய நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம் அல்லது உங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் கிப்ட் ஷாப் ஆகியவற்றில் இந்த பொருள்களை விற்பனை செய்யலாம் .மற்றும் நீங்களே நேரடியாக வாடிக்கையாளரிடம் விற்பனை செய்யலாம் .
நீங்கள் இந்த அலங்கார பொருள்களை எப்படி விற்பது என கவலை கொள்ள வேண்டாம் .தயாரிக்கும் பொருளை வாடிக்கையாளரிடம் நேரில் காட்டியும் அவைகளின் விலை விவரங்கள் பற்றியும் தெரிவிப்பதால் இந்த பொருள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் .திருமணம் மற்றும் பல நிகழ்சிகளில் நினைவு பரிசாக இந்த அலங்கார பொருளை வழங்கலாம் .
நாம் தயாரிக்கும் பொருள்கள் அழகு நிறைந்ததாகவும் மற்றும் வடிக்கையாளர்க்கு பிடித்த வகையிலும் பயன்னுள்ளதாகவும் இருக்க வேண்டும் .மிகவும் முக்கியமாக நல்ல தரமானதாக இருக்க வேண்டும் .நாம் தரமான பொருள்களை விற்பனை செய்தால் மட்டுமே நமக்கு அதிக படியான அடர் கிடைக்கும் நம்மிடம் ஒரு முறை பொருள்கள் வாங்கி பயன் உள்ளதாக இருந்தால் தான் மறுபடியும் அவர்கள் விரும்பி பொருள்களை வாங்குவர் .
நம் தயாரிப்பின் பெயர், நம் தொலைபேசி எண் கொண்ட சிறு ஸ்டிக்கரை ஒவ்வொரு தயாரிப்பிலும் ஒட்டி அனுப்புவது நம் தயாரிப்புகளுக்குப் பெருமை சேர்த்து, ஆர்டர் தேடிவர வைக்கும்.
என்ன, இறங்கிடலாம்தானே!
நாம் உருவாகும் பொருள்களின் மீது நமது தொலைபேசி நம்பர் அல்லது வீட்டின் முகவரி ஆகியவற்றை பசை கொண்டு ஒட்டி அனுப்புவதன் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்கும் .
No comments:
Post a Comment