‘கிடைத்த பொருளை கொண்டு சுய தொழிலில் முன்னேற சாஸ் தயாரிக்கும் தொழில் ஒரு சிறந்த தொழிலாக இருக்கும் .
வெளி நாடுகளில் சாஸ் சிறந்த முறையில் விற்பனை ஆகிறது .அங்குள்ள மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள் .மேலும் பெண்கள் இதை வீட்டிலிருதே தயாரித்து கொள்ளலாம் .வீட்டிலிருந்து வருமானம் பெறுவதற்கு இது ஒரு சிறந்த தொழிலாக அமையும் .
அனைத்து ஹோட்டல் மற்றும் பாஸ்ட் புட் கடைகளிலும் சாஸ் வெகுவாக விற்பனை ஆகிறது .எனவே இந்த தொழிலிலை நம்பி முழுமையாக இறங்கலாம் .
ஒரு கிலோவுக்கு அரை லிட்டர் சாஸ் என்பதன் அடிப்படையில் ....நாம் எவ்ளோ அளவுக்கு வேண்டுமோ அதன் இரு மடங்குக்கு அளவுக்கு தக்காளி சேர்த்து கொள்ள வேண்டும் .அதோடு தேவையான அளவிற்கு சர்க்கரை ,உப்பு ,காரம் சேர்த்துக்கொள்ள வேண்டும் .இறுதியாக லவங்கம் ,வெங்காயம் ,கிராம்பு போன்றவற்றை சேர்த்து இறக்கினால் சுவையான சாஸ் ரெடி ......
தக்காளி சாஸ் வீட்டிலிருந்தே தயாரிக்கலாம் .முதலில் தக்காளியை துண்டுகளாக நறுக்கி அதனை நன்கு கொதிக்க வைத்து பின்னர் வலி கட்டி ஜூசாக பாட்டிலில் விற்கலாம் .இந்த முறையை செய்வதற்கு தனி தனியாக இயந்திரம் உள்ளது .இதனை கவர் செய்து கண்ணுக்கு கவர்ச்சியாக வைத்து விற்றால் பார்க்கும் மக்கள் அதனை விரும்பி வாங்குவார்கள் .
தக்காளி சாஸ் செய்வதற்கு மெஷின் நிறைய உள்ளது .அதனை வேக வைத்து அரைத்து கொடுப்பதற்கும் மெஷின் உள்ளது .நீராவி கலன் மூலம் தக்காளி ஜூசை வேக வைத்து அதை பாட்டிலில் வைத்து விற்கலாம் .
தக்காளி இப்போதெல்லாம் வீட்டிலேயே வளர்க்கப்படுகிறது .அதிகமாக விற்பனை செய்ய வேண்டும் என்றால் நாம் கடைகளில் வாங்கி சாஸ் தயாரிக்கலாம் .நமக்கு மட்டும் என்றால் வீட்டில் இருக்கும் பழத்தை கொண்டு தயாரிக்கலாம் .வீட்டிலேயே மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து தயாரிக்கலாம் .பெரிய அளவில் விற்பனை செய்யும் போது பெரிய இயந்திரங்களை வாங்கி கொள்ளலாம் .
நாம் தயாரிக்கும் உணவு பொருட்கள் மிக தரமானதாக இருக்க வேண்டும் .அதை ஆய்வு செய்ய "மத்திய அரசு ஆய்வாளர்கள்" வருவார்கள் .இதை தயாரிக்க " ஃபுட் ப்ராஸசிங்" என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.இவர்கள் லைசன்ஸ் கொடுத்தால் மட்டுமே பெரிய அளவில் விற்பனை செய்ய முடியும் .முதலில் சாம்பிளை ஆய்வு வருவார்கள் .அதன் பின்னரே விற்பனை செய்ய அனுமதி தருவார்கள் .உணவு தயாரிக்கும் முறைகளில் தரக்கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம் .
நாம் நம் நிறுவனங்களை தயாரிக்கும் போது நமது சுற்று புற சூழலில் அதேமாதிரியான கடைகள் எதனை உள்ளதா என்பதை விசாரித்து வைக்க வேண்டும் .அப்டியே இருந்தாலும் அங்கு சென்று முதலில் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்யவேண்டும்.அதே போல் மற்ற காய்கறிகளில் விலை குறைவாக இருப்பின் அதன் மூலம் சாஸ் தயாரிக்கலாம் .
வீட்டிலிருந்தே ஒரு நாளைக்கு ஏறக்குறைய 80 பாட்டில்கள் வரை தயாரிக்கலாம் .15 ரூபாய் லாபம் வைத்து விற்றால் 500 முதல் 1000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் .அதே போல் நமது சுற்று புற இடங்களில் கிடைக்கும் பழங்களை கொண்டு சாஸ் தயாரித்தால் அதிக படியான பணத்தை அள்ளலாம் .கடை நன்கு அனுபவம் பெற்ற பின் பெரிய அளவிலான ஆடர்களை பிடித்து பணத்தை அள்ளலாம் .
No comments:
Post a Comment