வெளிநாட்டு வாஸ்துவைப் பின்பற்றலாமா ?
➤வாஸ்து என்பது நம் நேசத்திக்குத் தக்க படித்தான் அமைய வேண்டும் .இதர நேசத்தின் வாஸ்து சாஸ்திரச் சட்டங்கள் நம் ஊரில் நடைமுறைப்படுத்த முடியாது .சாஸ்திரம் என்பதற்கும் சமுதாய வாழ்விற்கும் சுற்றுபுறச் சூழ்நிலைகளுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு .நம் தேசத்தில் கூட வட பகுதியில் ஆலயத்தில் பூஜை செய்பவர்கள், மேல் சட்டை அணிந்தும் தலைப்பாகை அணிந்தும் பூஜை செய்கின்றன .தென்பகுதியில் (தமிழ்நாடு ,ஆந்திரா,கர்நாடகா ,கேரளா போன்ற பகுதியில் )ஆலய பூஜை செய்பவர்கள் மேல் -சட்டை அணியாமலும் தலைப்பாகை அணியாமலும் போக்கை செய்கின்றன.இவ்வித மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கையில் சூழ்நிலைக் கேற்பவும் சாஸ்த்திரங்களில் மாற்றம் உள்ளதை அறிய முடிகிறது .
➤பணம் மட்டும் வாழ்க்கையாகாது !வாழ்க்கை என்பது நிம்மதியுடன் கூடியதாக அமைய வேண்டும் .இங்கு வாஸ்துப்படி வீடு அமைந்தாலும் ஜாதக யோகங்களையும் மனதில் கொள்ள வேண்டும் .
➤நமது மனநிலையும் ,வெளிப்புறச் சூழ்நிலையும் ஒத்துப் போகும் பொழுதே சக்திமிகு ஆற்றல் நம்மிடமிருந்து வெளிப்படும் .இதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதே வாஸ்து சாஸ்திரம் .மனிதன் தான் தங்கும் இடத்தை வலுவானதாக இருக்கச் கொள்வதே நல்வாழ்விற்கு வழிவகுக்கும் .தொழிற்சாலை போன்ற இடங்களும் வாஸ்து முறை படி அமையவேண்டும் .பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இடம் என்பதால் அது பாதுகாப்பான இடமாக அமைவதற்கு வாஸ்து சாஸ்திரம் அவசியம் ஆகிறது .சந்திரனிலும் ,பூமியிலும் புவி ஈர்ப்பு விசை வித்யாசப்படுகின்றது என்ற விஞ்ஞான உண்மை வாஸ்துவின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.திருப்பதி கோவிலின் வடகிழக்கு மூலையின் குளம் அமைய பெற்றக் காரணமே திருப்பதியின் லக்ஷ்மீகரமும் ,ஜன ஆகர்ஷணமும் ஏராளமாய் இருப்பதற்கு முக்கிய காரணம் எனலாம் .
No comments:
Post a Comment